அந்தப் பக்கம் அசோகன்.. இந்தப் பக்கம் ஆனந்த்.. இருவருடன் உறவாடிய பெண்.. கொலையில் முடிந்த கள்ளக்காதல்!
நெல்லை: நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே ஒரே சமயத்தில் இரு ஆண்களுடன் உறவு வைத்திருந்த பெண் வெட்டிக் கொல்லப்பட்டார்.
பாவூர்சத்திரம் அருகே உள்ளது புளிச்சகுளம் கிராமம். இந்த கிராமத்தை சார்ந்தவர் வேணி. திருமணம் ஆனவர். இவருக்கும் முத்துமலையாபுரத்தை சார்ந்த அசோகன் என்பவருக்கும் பல ஆண்டு காலமாக கள்ள தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இதே ஊரை சார்ந்த சுப்பையா மகன் ஆனந்த என்பவரோடும் கள்ள தொடர்பு இருந்துள்ளது.

சம்பவத்தன்று இரவு வேணி வீட்டுக்கு அசோகன் சென்றுள்ளார். அப்போது வேணி நீட்டு கதவை அசோகன் தட்டியுள்ளார். ஆனால் வேணி கதவை திறக்க மறுத்துள்ளார். நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்னர் கதவை திறந்துள்ளார். அப்போது அவரது வீட்டில் இருந்து ஆனந்த் வெளியே வந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியான அசோகன் ஆத்திரமடைந்தார்.
கோபத்துடன் கீழே கிடந்த செங்கல்லை எடுத்து ஆனந்த்தை சரமாரியாக தாக்கினார். அவரது பின் தலையில் அரிவாளால் வெட்டி கீழே தள்ளினார். பின்னர் அவர் மீது டூவீலரை ஏற்றி விபத்து நடந்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி விட்டார். இதுகுறித்து குற்றாலம் போலீசாருக்கு தகவல் கிடைக்கவே அவர்கள் விரைந்து வந்து வேணியைப் பிடித்து நடத்திய விசாரணையில் உண்மை தெரிய வந்தது.
ஆனந்தோடும், அசோகனோடும் கள்ள தொடர்பு இருந்ததும் இருவருடனும் ஒருவருக்கு தெரியாமல் ஒருவருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததும் அசோகன் இல்லாத சமயம் பார்த்து ஆனந்தை வரவழைத்து உல்லாசமாக இருப்பதும், ஆனந்த் இல்லாத சமயத்தில் அசோகனை வரவழைப்பதும் தெரிய வந்தது. அவர் கொடுத்த தகவலைத் தொடர்ந்து குற்றாலம், செங்கோட்டை போலீசார் பல்வேறு இடங்களில் தேடி அசோகனை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications