சொல்லச் சொல்ல கேட்காமல் கள்ளக்காதல்: அக்காவை கழுத்தை நெறித்துக் கொன்ற தம்பி
திருப்பூர்: திருப்பூரில் திருமணம் ஆனவருடன் கள்ளக்காதல் வைத்திருந்த அக்காவை தம்பி கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே உள்ள சேனாபதிபாளையம் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் சிதம்பரம். அவரது மனைவி முத்துலட்சுமி. அவர்களுக்கு நித்யா(23) என்ற மகளும், சந்திரகுமார்(19) என்ற மகனும் உள்ளனர். நித்யா கூலி வேலைக்கு சென்று வந்தார். சந்திரகுமார் பெயிண்டராக உள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோரை இழந்த நித்யா தனது தம்பியுடன் வசித்து வந்தார். இந்நிலையில் அவருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் திருமணமானவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை அறிந்த சந்திரகுமார் அவர்கள் இருவரையும் எச்சரித்துள்ளார். ஆனால் அவர்கள் சந்திரகுமாரின் எச்சரிக்கையை கண்டுகொள்ளாமல் அவ்வப்போது சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் சந்திரகுமார் வெளியே சென்றிருந்தார். அவர் வர நேரமாகும் என்று நினைத்த நித்யா தனது கள்ளக்காதலனை வீட்டுக்கு வரவழைத்து உல்லாசமாக இருந்தார். அந்த நேரம் வீடு திரும்பிய சந்திரகுமார் தனது அக்கா பக்கத்துவீட்டுக்காரருடன் உல்லாசமாக இருப்பதை பார்த்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
பின்னர் அவர் மதியம் வீடு திரும்பியபோது நித்யா தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது சந்திரகுமார் நித்யாவின் கழுத்தில் கிடந்த துப்பட்டாவை வைத்து அவரது கழுத்தை நெறித்துக் கொன்றார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் சந்திரகுமார் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications