7-வது ஊதிய குழு பரிந்துரைப் படி தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி வழங்க விஜயகாந்த் வலியுறுத்தல்

மத்திய அரசு அறிவித்துள்ள அகவிலைப்படி, தமிழக அரசு ஊழியர்களுக்கு இந்தாள் வரை வழங்கப்படாதது ஏன்?. என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏழாவது சம்பள குழு பரிந்துரை அமல் படுத்துவதில் காலத்தாமதமானால் இடைக்கால நிவாரணம் கூட வழங்காமல், எந்த அறிவிப்பும் வெளியிடப்படாமல் உள்ளது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை :

Implement 7th Pay Commission for Tamil Nadu govt employees - Vijayakanth

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் தமிழக முதல்வராக இருந்த பொழுது, மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு எப்பொழுதெல்லாம் அகவிலைப்படி வழங்குகிறதோ அதே தேதியிட்டு தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி வழங்க வேண்டும் என்று நிரந்தர உத்தரவை பதிவுசெய்துள்ளார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கிய போதெல்லாம், தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருவது நடைமுறையாக உள்ளது. பத்து மாதங்கள் கடந்தும் தமிழக அரசு ஊழியர்களுக்கான ஏழாவது சம்பள குழு பரிந்துரையின் படி ஊதியம் வழங்கப்படவில்லை, சம்பள குழு பரிந்துரை நடைமுறை படுத்துவதில் தாமதம் ஏன்.

ஏழாவது சம்பள குழு பரிந்துரை அமல் படுத்துவதில் காலத்தாமதமானால் இடைக்கால நிவாரணம் கூட வழங்காமல், எந்த அறிவிப்பும் வெளியிடப்படாமல் உள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% சதவிகிதம் அகவிலைப்படி 01.07.2016 ஆம் நாளில் இருந்து ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளார்கள்.

மத்திய அரசு அறிவித்துள்ள அகவிலைப்படி, தமிழக அரசு ஊழியர்களுக்கு இந்தாள் வரை வழங்கப்படாதது ஏன்?. வரும் பொங்கல் பண்டிகைக்குள் ஏழாவது ஊதிய குழு பரிந்துரையின் படி பணப்பயனையும் 01.07.2016 முதல் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். மேலும் காலதாமதம் செய்தால் இந்த அரசு தன்விரல் கொண்டு கண்களை குத்திக்கொள்வது போல் ஆகும் என்றும் விஜயகாந்த் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+