பீறிட்ட கடமை.. நீளுகிறது நேரம்.. பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
சென்னை: ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் பங்களிப்பு இன்றியமையாதது என்பதால், பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளின் நிர்வாக மேம்பாட்டிற்காக இந்த மாற்றத்தை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடை விடுமுறை துவங்கியாகிவிட்டது.. இனி அடுத்து, மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.. ஆனால், சமீபகாலமாகவே, அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்துகொண்டே போவதால் அதை அதிகரிக்கும் நோக்கில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதிலும், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலால் பள்ளிகள் திறப்பதும், மூடுவதுமாக இருப்பதால் மாணவர்கள் பெரும்பாலும் 'ஆன்லைன்' மூலமே பாடங்களை கற்கின்றனர்.

முயற்சிகள்: தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு முன்பு அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை என்பது மிகவும் குறைந்த நிலையில் இருந்தது. அதன் பிறகு அரசின் முயற்சிகளால் மாணவர் சேர்க்கை சதவீதம் படிப்படியாக உயர்ந்தது. பலரும் கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க முற்பட்டனர். இதனையடுத்து கடந்த ஆண்டில் மட்டும் 5 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.
இப்போது மறுபடியும் பள்ளிகள் திறக்கப்பட்டாலும், பல பள்ளிகளில் மாணவர்கள் வருகை குறைவாகவே உள்ளது. அதனால், மாணவர்களின் வருகையை அதிகரிக்க ஆசிரியர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். "அரசு பள்ளிகளைக் கொண்டாடுவோம்" என்ற தலைப்பில் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணியையும் சமீபத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிக்கல்வித்துறை நடத்தியது.
சுழற்கேடயங்கள்: அதேபோல, அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை கல்வி பணியில் முன்னேற்றம் அடையச் செய்யும் விதமாக ஆண்டுதோறும் மாவட்டத்தில் 3 சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து, மாவட்ட வாரியாக சுழற்கேடயங்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், 2021-22-ம் கல்வி ஆண்டில் 114 பள்ளிகளுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, 2022-23-ம் கல்வி ஆண்டில் சிறந்த பள்ளிகளை தேர்வு செய்ய அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
பள்ளி தரம்: பள்ளிகளின் தரத்தை உயர்த்த இப்படி பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு செய்து வரும் அதேசமயம், பள்ளி ஆசிரியர்கள் தொடர்பாகவும் முக்கிய மாற்றங்களை செய்து வருகிறது.. அதன்படி, அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் பணி நேரத்தை மாற்றம் செய்து தமிழக பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மேஜர் அறிவிப்பு: இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களான உதவியாளர், இளநிலை உதவியாளர்களின் வேலை நேரமானது காலை 9 மணி முதல் மாலை 4.45 மணி வரையில் மாற்றி அமைக்கப்படுகிறது. பள்ளி வருகைப் பதிவேட்டை முடித்தல், ஆசிரியர்களின் விடுப்புகளை குறித்தல், பிற அலுவல் பணிகளை மேற்கொள்வதில் ஏற்படும் நிர்வாக குறைபாடுகளை சரி செய்யும் வகையில் பணி நேரம் மாற்றப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளின் நிர்வாக மேம்பாட்டிற்காக ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் பங்களிப்பு இன்றியமையாதது என்பதால் பணி நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது" என்று புதிதாக அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications