சென்னையில் துணிகரம்.. பைனான்சியரை வீடு புகுந்து தாக்கி 100 சவரன் நகை கொள்ளை
சென்னை: பெசன்ட் நகர் பகுதியில் பைனான்சியர் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய கொள்ளையர்கள் 100 சவரன் நகையுடன் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக சென்னையில் கொலை, கொள்ளை அதிகரித்துவிட்டது. இதுகுறித்த ஒன்இந்தியா செய்தியை சுட்டிக்காட்டி திமுக தலைவர் கருணாநிதி கடந்த சனிக்கிழமை அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், கூலிப்படையினர் கொட்டமடிக்கும் நகரமாக சென்னை மாறிவிட்டதாக அவர் சாடியிருந்தார்.

கொள்ளையர், கொலையாளிகளை பிடிக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கவும் கருணாநிதி வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், சென்னையில் இன்று அதிகாலை மற்றொரு துணிகர கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
பெசன்ட்நகர், கலாஷேத்திரா காலனியில் வசிப்பவர் மதியரசன். பைனான்சியர். இவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த 3 பேர் கொண்ட கொள்ளை கும்பல், மதியரசனை சரமாரியாக தாக்கிவிட்டு, வீட்டுக்குள் இருந்த 100 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.6 லட்சம் ரொக்கப் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பியோடிவிட்டது.
நகரின் முக்கிய பகுதியொன்றில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் சென்னைவாசிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை












Click it and Unblock the Notifications