நடத்தையில் சந்தேகம்.. மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவர்.. சென்னையில் பயங்கரம்
சென்னை காசிமேட்டில் மனைவின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக கணவரே கத்தியால் குத்திக் கொன்ற நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: காசிமேட்டில் மனைவின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக கணவரே கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கணவரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை காசிமேடு இந்திரா நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் மதி. 50 வயதான இவர் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி தேசம்மாள்.
இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்.

மனைவியின் நடத்தையில் சந்தேகம்
இந்நிலையில் மனைவி தேசம்மாளின் நடத்தையில் மதிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்றிரவும் கணவன் மனைவிக்குள் வழக்கம் போல் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த சண்டை இன்று காலையில் எழுந்தப் பிறகும் தொடந்துள்ளது.

சரமாரியாக கத்திக்குத்து
இதனால் ஆத்திரம் அடைந்த மதி, சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்துவந்து தேசம்மாளின் வயிற்றில் சரமாரியாக குத்தியுள்ளார். ரத்தவெள்ளத்தில் விழுந்த தேசம்மாள் கத்தி கூச்சலிட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு மகன் அஜீத் ஓடிவந்து தாயை காப்பற்ற முயன்றுள்ளார். ஆனால் அவரையும் மதி கத்தியால் குத்தினார்.

மகன் படுகாயம்
இதில் அஜீத்தும் படுகாயம் அடைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். இதையடுத்து மதி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் காசிமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மனைவி பலி - மகனுக்கு சிகிச்சை
சிகிச்சை பலன் அளிக்காமல் தேசம்மாள் பரிதாபமாக இறந்தார். அஜீத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மதியை கைது செய்தனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications