எப்ப விடிவு?... கதிராமங்கலத்தில் 71ஆவது நாளாகத் தொடரும் அறப் போராட்டம்!
கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி நிறுவனம் என்ற கோரிக்கையுடன் மக்கள் 71ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சை: கதிராமங்கலத்திலிருந்து ஓ.என்.ஜி.சி நிறுவனம் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மக்கள் தொடர்ந்து 71-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் எண்ணெய் எடுக்கும் பணியைச் செய்து வருகிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படும், நிலத்தடி நீர் நாசமடையும் எனக் கூறி, ஒ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும், சில வாரங்களுக்கு முன்பு கதிராமங்கலத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படாததால் சிறையில் தவித்து வருகின்றனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல நாட்களாக போராட்டங்களில் ஈடுபட்டும் கைது செய்யப்பட்ட 10 பேரும் விடுதலை செய்யப்படவில்லை.
இந்நிலையில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் கதிராமங்கலத்தை விட்டு வெளியேற வேண்டும், கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதில் 5 பேர் நேற்று மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மக்கள் போராட்டம் 71ஆவது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வந்தபோதிலும் இதற்கான தீர்வை மத்திய, மாநில அரசுகள் முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, கதிராமங்கலத்தில் குறுவை சாகுபடிக்கான விவசாய வேலைகள் நடைபெற வேண்டிய சூழலில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதால் அவர்களின் நிலைமை இன்னமும் மோசமடையும் என்கின்றனர் உள்ளூர் மக்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications