கொடுங்கையூர் தீ விபத்தில் ரயில்வே ஊழியரின் குடும்பமே பலி
சென்னை கொடுங்கையூர் தீ விபத்தில் ரயில்வே ஊழியரின் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் உயிரிழந்துள்ளனர்.
Recommended Video

சென்னை: கொடுங்கையூர் தீ விபத்தில் ரயில்வே ஊழியரின் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் உயிரிழந்துள்ளனர்.
சென்னை கொடுங்கையூர் முத்தமிழ்நகரைச் சேர்ந்தவர் வெங்கடபிரகாஷ். ரயில்வே ஊழியரான இவருக்கு கீதா என்ற மனைவியும் சர்மிளா என்ற 24 வயது மகள் மற்றும் 20 வயதில் கிஷோர் என்ற மகனும் இருந்தனர்.
கடந்த 23 ஆம் தேதி அதிகாலையில் எழுந்த வெங்கடபிரகாஷ், வீட்டில் மின் விளக்கு சுவிட்சை போட்டார். அப்போது சமையல் கியாஸ் கசிவு ஏற்பட்டு கியாஸ் பரவி இருந்ததால் தீப்பிடித்து வீடு முழுவதும் எரிந்து நாசமானது.

கருகிய நிலையில் அனுமதி
இந்த தீ விபத்தில் வெங்கடபிரகாஷ், கீதா, சர்மிளா, கிஷோர் ஆகிய 4 பேரும் உடல் கருகினர். ஆபத்தான நிலையில் அனைவரும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

மனைவி உயிரிழப்பு
ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி மறுநாள் காலை கீதா பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர்.

பலி எண்ணிக்கை உயர்வு
இந்தநிலையில் நேற்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் இன்றி கிஷோர், சர்மிளா இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

குடும்பமே பலியானது
வெங்கடபிரகாஷ் மட்டும் உயிருக்கு போராடி வந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் வெங்கட பிரகாஷும் உயிரிழந்தார். தீ விபத்தில் குடும்பமே பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications