கிருஷ்ணகிரியில் தலித் வாலிபர் வாயில் சிறுநீர் கழித்த உயர் சாதி கும்பல்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் 20 வயது தலித் வாலிபரின் வாயில் உயர் சாதியினர் சிறுநீர் கழித்த அவலம் நடந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கருவனூரைச் சேர்ந்தவர் அரவிந்தன்(20). பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். அவர் விடுப்பில் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
கடந்த 2ம் தேதி அவரும், அவரது உறவினர் தினேஷும்(20) கோவிலுக்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களை பார்த்த உயர் சாதியைச் சேர்ந்த சிலர் ஆத்திரம் அடைந்துள்ளனர். அந்த கும்பல் அரவிந்தன் மற்றும் தினேஷை கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளனர். மேலும் அவர்களை தாக்கியுள்ளனர்.
இதில் அரவிந்தன் காயம் அடைந்து கீழே விழுந்தபோது தாகம், தாகம் என்று கூறியுள்ளார். உடனே அவர்கள் அரவிந்தனின் வாயில் சிறுநீரை கழித்துள்ளனர். இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின்பேரில் போலீசார் தாக்குதல் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். அரவிந்தனும், தினேஷும் சாதிப் பெயரால் மோசமாக நடத்தப்பட்டார்களாக என்பதை உறுதி செய்த பிறகு அந்த வழக்கை எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் மாற்றுவோம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications