தமிழகத்தில் தனியார் பேருந்துகள் நாளை வேலைநிறுத்தம்- ஜெ.க்கு ஆதரவாக உண்ணாவிரதம்!

Subscribe to Oneindia Tamil

In Show of Support. TN Private buses go to Strike for Jayalalithaa
சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் நாளை தனியார் பேருந்துகள் ஓடாது என்று பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தனியார் அமைப்புகள், பொதுநல சங்கங்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக தமிழ்நாடு தனியார் பேருந்து உரிமையாளர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களின் சம்மேளன தலைவர் தங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக மக்களின் முதல்வர் ஜெயலலிதாவை ஆதரித்து தமிழகம் முழுவதும் நாளை தனியார் பேருந்துகள் இயங்காது. மேலும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரதம் நடைபெறும்.

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பேருந்துகள் ஓடாது. தமிழகத்தில் 6 ஆயிரம் தனியார் பேருந்துகள் உள்ளன. 2 ஆயிரம் பேருந்து ஆபரேட்டர்கள் இந்த அறப்போராட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

இவ்வாறு தங்கராஜ் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+