தி.நகர். ஏழுமையான் கோயிலுக்கு அகோரி வருகையால் சுத்தம் செய்து சிறப்பு பூஜை?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை தி.நகரில் உள்ள ஏழுமையான் கோயிலுக்கு அகோரி வந்ததால் கோயிலை சுத்தம் செய்து சிறப்பு பூஜை செய்யப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னை: சென்னை தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள திருப்பதி ஏழுமையான் கோயில் உள்ளது. இங்கு அகோரிகள் வந்து வழிபாட்டுச் சென்றதால் கோயிலை சுத்தப்படுத்த, கோயில் நடை சாத்தப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

In T.Nagar Tirupati venketeswara temple Agoris came and done prayer

தமிழகத்தில் நிர்வாண அகோரி பாபாக்கள் நடமாடுவது இல்லை. வட இந்தியாவில் ஹரித்வார், காசி, ஜூனாகத் ஆகிய இடங்களில் இந்த அகோரிகள் வலம் வருவர்.

இவர்களை வட இந்தியர்கள் மிகவும் பய பக்தியுடன் வணங்குவர். இந்த நிலையில் சென்னை தி.நகரில் திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான ஏழுமலையான் கோயில் அகோரி ஒருவர் நேற்று வழிபாடு நடத்தியுள்ளார். இது தொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

மேலும் மனித மாமிசம் சாப்பிடும் அகோரி வந்ததால் சிறப்பு பூஜை செய்வதற்காக நடை சாத்தப்பட்டதாகவும் ஒரு தகவல் பரவியது. ஆனால் தேவஸ்தான அதிகாரி சீனிவாசலு, ஆண்டு வரவு செலவை இறைவன் முன் சமர்பிக்கும் பூஜை நடத்தப்பட்டதால் நடை சாத்தப்பட்டது என விளக்கம் அளித்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In T.Nagar Tirupati venketeswara temple Agoris came and done prayer. So devasdanam closed temple for cleaning temple but Devasdanam refused it.
Please Wait while comments are loading...