திருச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை
திருச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி: ஜீயபுரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி, ஜீயபுரத்தில் உள்ள திருசெந்தூர் அக்ரஹாரத்தில் கிருஷ்ணமூர்த்தி அகிலா என்ற வயதான தம்பதியினர் வசித்து வந்தனர். அவர்களுக்கு மது, ரகுநாத் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தினர் யாரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர்.
அப்போத கிருஷ்ணமூர்த்தி அகிலா தம்பதியினர் தங்களின் மகன்களான மது, ரகுநாத்துடன் பிணமாக கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அவர்கள் நான்கு பேரும் உணவில் விஷம் கலந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications