பவானி ஆற்றில் பரிசல் கவிழ்ந்து விபத்து: இளம் தம்பதி உட்பட 4 பேர் பலியான சோகம்
பவானி ஆற்றில் பரிசல் கவிழ்ந்து விபத்துகுகுள்ளானது. இதில் கணவன் மனைவி உட்பட 4 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
பவானி சாகர்: பாவனி ஆற்றில் பரிசல் கவிழ்ந்ததில் இளம் தம்பதி உட்பட 4 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பொங்கல் விடுமுறை கொண்டாட பரிசல் பயணம் சென்றபோது விபத்து நேரிட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த 29 வயதான ஜோசப் பவுல்ராஜ் என்பவர் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் தனது மனைவி ஆஷா ஜெனிபர் மற்றும் திருச்சியை சேர்ந்த உறவினர்கள் ஆனந்த் பிரான்சிஸ், ஜார்ஜ் ஆல்வின் உள்ளிட்ட 6 பேர் பொங்கல் விடுமுறையை கொண்டாடுவதற்காக பாவனிசாகர் அருகே உள்ள கொத்தமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு நேற்று மதியம் சென்றார்.

பின்னர் நேற்று மாலை 6 பேரும் அருகில் உள்ள பவானி ஆற்றில் பரிசல் பயணம் செய்தனர். அப்போது திடீரென பரிசல் கவிழ்ந்தது.
இதில் ஜோசப் பவுல்ராஜ் ஆஷா ஜெனிபர்,ஆனந்த் பிரான்சிஸ், ஜார்ஜ் ஆல்வின் ஆகிய 4 பேரும் ஆற்றில் மூழ்கினர். மற்ற இரண்டு பேரும் நீந்தி கரைசேர்ந்தனர்.
அவர்களின் கூச்சலைக் கேட்டு அங்கு திரண்ட கிராம மக்கள் 4 பேரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் 4 பேரும் ஆற்றில் மூழ்கினர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் 4 பேரின் உடல்களையும் மாலை 6.30 மணியளவில் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பொங்கல் விடுமுறையை கொண்டாட சென்ற கணவன் மனைவி உட்பட 4 பேர் ஆற்றில் பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏறபடுத்தியுள்ளது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications