2வது நாளாக தொடரும் ரெய்டு.. விஜய் வீட்டில் தீவிர சோதனை.. ஏஜிஎஸ், அன்புச்செழியன் வீட்டிலும் விசாரணை!
நடிகர் விஜய், சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடு, அலுவலகங்களிலும், ஏ.ஜி.எஸ் குழுமத்துக்கு சொந்தமான இடங்களிலும் 2 ஆவது நாளாக ஐ.டி ரெய்டு நடந்து வருகிறது.
Recommended Video
சென்னை: நடிகர் விஜய், சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடு, அலுவலகங்களிலும், ஏ.ஜி.எஸ் குழுமத்துக்கு சொந்தமான இடங்களிலும் 2 ஆவது நாளாக ஐ.டி ரெய்டு நடந்து வருகிறது.
நடிகர் விஜய் வீட்டில் நடக்கும் வருமான வரித்துறை சோதனை நாடு முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிகில் பட வசூலை மையமாக வைத்து இந்த வருமான வரித்துறை சோதனை நடக்கிறது.
பிகில் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனத்தில் நேற்று காலையில் இருந்து வருமான வரித்துறை சோதனை நடந்து வந்தது. இதனிடையே, நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிபில் இருந்த நடிகர் விஜயிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர். தங்களுடன் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

விஜய் வீடு
நேற்று விஜய் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. பிகில் படத்தில் அவர் வாங்கிய சம்பளம் தொடர்பாக நிறைய கேள்விகள் நேற்று கேட்கப்பட்டது. இதனால் அவரிடம் நிறைய நேரம் அதிகாரிகள் விசாரித்தனர். இது தொடர்பான ஆவணங்களைதான் அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். இந்த நிலையில் நடிகர் விஜய் வீட்டில் 2 ஆவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.

பண்ணை வீடு
அவரின் பண்ணை வீட்டில் சோதனை நடந்து வருகிறது. விஜய் வீட்டில் மொத்தம் 6 அதிகாரிகள் சோதனை செய்கிறார்கள். 5 சிஆர்பிஎப் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று காலை மீண்டும் அங்கு அதிகாரிகள் சோதனை செய்தனர். பிகில் பட வசூல் மட்டும்தான் இந்த சோதனைக்கு காரணம் என்று கூறுகிறார்கள்.

எப்படி சோதனை
அதேபோல் நேற்று சோதனையில் ஏஜிஎஸ் சினிமாஸ், அன்புச்செழியன் தொடர்புடைய இடங்களிலிருந்து கணக்கில்வராத ரூ.24 கோடி பறிமுதல்செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணைகள் நடந்து வருகிறது.. கணக்கில் வரவு வைக்கப்படாத ஏராளமான தங்க நகைகளும் சிக்கியுள்ளன. ரொக்கம், நகை குறித்து விளக்கம் கேட்டது வருமானவரித்துறை. இதனால் இன்று விசாரணை தொடர்கிறது.

சினிமா எப்படி
சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடந்து வருகிறது. அவரின் வீட்டில் இன்று காலையில் இருந்து இரண்டாவது நாளாக 10 அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள். ஏ.ஜி.எஸ் குழுமத்துக்கு சொந்தமான இடங்களிலும் 2 ஆவது நாளாக ஐ.டி ரெய்டு நடந்து வருகிறது. கல்பாத்தி குடும்ப உறுப்பினர்கள் எல்லோரிடமும் தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது. அவர்களுக்கு உள்ள மூன்று வீடுகளிலும் தீவிர விசாரணை நடக்கிறது.
-
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ












Click it and Unblock the Notifications