வருமான வரி வழக்கு: எழும்பூர் நீதிமன்றத்தில் ஜெ- சசி இன்றும் ஆஜராகவில்லை; ஜூலை 24க்கு ஒத்திவைப்பு
சென்னை: வருமான வரி செலுத்தாத வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் இன்றும் ஆஜராகவில்லை. ஜெயலலிதா சார்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டதால் வழக்கின் விசாரணை ஜூலை 24ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த 1991 - 92 மற்றும் 1992 - 93 ஆகிய நிதியாண்டுகளில் சசி எண்டர்பிரைசஸ் நிறுவனம் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யவில்லை என்று கூறி அதன் பங்குதாரர்களான ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோருக்கு எதிராக வருமான வரித் துறையினர் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதலாவது பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் கடந்த 15 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.
இந்த வழக்குகளுக்கு எதிராக ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீடுகள் சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. அதன் தொடர்ச்சியாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதது குற்றம் என்று கூறி, இந்த வழக்கை நான்கு மாதங்களுக்குள் விசாரணையை நடத்தி தீர்ப்பை வழங்க கடந்த ஜனவரியில் உத்தரவிட்டது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் ஏப்ரல் 3-ம் தேதி ஆஜராக, சென்னை - எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதுவரை அவர்கள் இருவரும் ஆஜராகவில்லை. பலமுறை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுவிட்டது.

ஜூன் 3ல் விசாரணை
வழக்கு மே 19ல் விசாரணைக்கு வந்தபோது, விசாரணையை தள்ளிவைத்த மாஜிஸ்திரேட் இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா ஆஜராகும் தேதி ஜூன் 3ம் தேதி முடிவு செய்யப்படும் என்று உத்தரவிட்டார். அதன் பின்னர் ஜூன் 3ம் தேதி இருவரும் நீதிமன்றத்தில் கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்று மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

ஜூன் 30க்கு ஒத்திவைப்பு
ஆனால் அவர்கள் இருவரும் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கு ஜூன் 30-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது அப்போது ஜெயலலிதா, சசிகலா இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்தார்.

இன்றும் ஆஜராகவில்லை
இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அதேசமயம் ஜெயலலிதா சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜூலை 24க்கு ஒத்திவைப்பு
அதில் வருமான வரித்துறையிடம் அபராதத்துடன் வருமான வரி கட்டுவதாக மனு அளித்தோம். அது இன்னும் நிலுவையில் உள்ளது. எனவே இவ்வழக்கை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அவரது மனுவை ஏற்ற நீதிமன்றம் வரும் 24ந் தேதிக்கு இவ்வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications