தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வனின் உதவியாளர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் ரெய்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தேனி: தினகரன் ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வனின் உதவியாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சசிகலா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் நேற்று முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர். இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

Income Tax Department is conducting raid in the Thanga Tamilselvan assistant Kanagaraj house

கிடைக்கும் ஆவணங்களின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் சோதனையை நீட்டித்து செல்கின்றனர். இந்நிலையில் தினகரனின் தீவிர ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வனின் உதவியாளர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

கம்பத்தில் உள்ள தங்க தமிழ்ச்செல்வனின் உதவியாளர் கனகராஜ் வீட்டில் அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். தினகரன் மற்றும் சசிகலாவின் தீவிர ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Income Tax Department is conducting raid in the Thanga Tamilselvan assistant Kanagaraj house. Income tax raiding as second day in Sasikala family members and friends house.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற