ஆர்கே.நகரில் மேள தாளத்துடன் வேட்பு மனுத்தாக்கல் செய்த வேட்பாளர்
ஆர்கே நகர் தொகுதியில் தூத்துக்குடியைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் மேளதாளத்துடன் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
சென்னை: ஆர்கே.நகர் தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் மேளதாளத்துடன் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இது அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்தது.
காலியாக உள்ள ஆர்கே.நகர் தொகுதிக்கு வரும் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று சுயேட்சை வேட்பாளர்கள் பலர் வேட்பு மனுத்தாக்களைத் தாக்கல் செய்தனர்.
தூத்துக்குடி வேட்பாளர்
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் அடுத்த மாதம் நடைபெற உள்ள சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஆர்.கே.நகர் தேர்தல் அலுவலரிடம் இன்று காலை வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
மேளம் தாளம் முழங்க ஊர்வலம்
மேள தாளம் முழங்க குடைபிடித்தப்படி ஊர்வலமாக வந்து அவர் வேட்புமனுவை தாக்கல் செய்தது அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்தது. பல அரசியல் கட்சிகளுக்கு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் கவுரப் பிரச்சனையாக உள்ளது.

சாவுகாசமாக வேட்புமனுத்தாக்கல்
சிதறிக் கிடக்கும் வாக்குகள் யாருக்கு சாதகமாக அமையும் என அரசியல் கட்சியினர் யூகிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இந்நிலையில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் மேளதாளம் முழங்க சாவுகாசமாக வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications