தமிழகத்தை ஏமாற்றிய இந்தியா.. இணையத்தை மிரட்டும் மக்கள்.. தேசிய அளவில் வைரலான ஹேஷ்டேக்!
தமிழகத்திற்கு இந்தியா துரோகம் செய்துவிட்டதாக டிவிட்டரில் தமிழக மக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
Recommended Video

சென்னை: தமிழகத்திற்கு இந்தியா துரோகம் செய்துவிட்டதாக டிவிட்டரில் தமிழக மக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதற்காக இந்தியா பிட்ரேய்ஸ் தமிழ்நாடு (#IndiaBetraysTamilnadu) என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி இருக்கிறார்கள்.
காவிரி மேலாண்மை வாரியம் பிரச்சனை, ஸ்டெர்லைட் பிரச்சனை, நியூட்ரினோ பிரச்சனை, ஹைட்ரோ கார்பன் பிரச்சனை, சாகர் மாலா பிரச்சனை, நிதி ஒதுக்குவதில் குறைப்பாடு என நிறைய பிரச்சனைகள் குறித்து இதில் பேசி வருகிறார்கள்.
இந்த ஹேஷ்டேக் இணையம் முழுக்க அதிகம் விவாதிக்கப்பட்டதால் தேசிய அளவில் வைரல் ஆகி இருக்கிறது. இதில் இன்னும் அதிகம் விவாதிக்கப்பட்டால் உலக அளவில் டிரெண்ட் ஆக வாய்ப்பு இருக்கிறது.
|
சுங்க சாவடி
காவிரி மேலாண்மை வாரிய போராட்டத்தில் விழுப்புரம் சுங்க சாவடி தமிழக வாழ்வுரிமை கட்சியினரால் அடித்து நொறுக்கப்பட்டது. இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
|
யாருக்கும் யாருக்கும்
இவர் ''இது வட இந்தியா, தென்னிந்தியா பிரச்சனைஇல்லை, கர்நாடகா தமிழ்நாடு பிரச்சனை இல்லை, இது நீதிக்கும் அநீதிக்குமான பிரச்சனை, சரிக்கும் தவருக்குமான சண்டை'' என்று குறிப்பிட்டுள்ளார்.
|
மோடிக்கு கடிதம்
இவர் ''ஹலோ மோடி, நீங்கள் ஒருவேளை மறந்து இருந்தால் இப்போது நியாபகப்படுத்துகிறேன். தமிழ்நாடு ஒன்றும் அண்டை நாடு கிடையாது. நாங்கள் இந்தியாவில்தான் இருக்கிறோம்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
|
கோபம்
இவர் ''இந்தியா என்று எங்களை கைவிடுகிறதோ அன்று நாங்கள் இந்தியாவை கைவிடுவோம '' என்று கோபமாக குறிப்பிட்டுள்ளார்.
|
தமிழக வளம்
இவர் ''நெய்வேலி நிலக்கரி இந்தியா முழுமைக்கும் வேண்டும். கூடங்குளம் மின்சாரம் இந்தியா முழுமைக்கும் வேண்டும். மீத்தேன் எடுத்தால் அதுவும் இந்தியா முழுமைக்கும். தமிழகத்தின் எல்லா வளமும் இந்தியா முழுமைக்கும் வேண்டும். ஆனால் காவிரி மட்டும் தமிழ்நாட்டிற்கு கிடையாதா?'' என்றுள்ளார்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன?












Click it and Unblock the Notifications