இலங்கை மீது இனப்படுகொலை விசாரணை: இந்தியா தீர்மானம் கொண்டு வர ராமதாஸ் வலியுறுத்தல்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இனப்படுகொலை:
இலங்கை போர் குறித்து ஜெர்மனியில் விசாரணை நடத்திய நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் நேற்று அளித்த தீர்ப்பில், இலங்கையில் நடைபெற்றது திட்டமிட்ட இனப்படுகொலை என்று அறிவித்திருக்கிறது. இந்த இன அழிப்புக்கு அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் துணையாக இருந்ததாகவும் தீர்ப்பாயம் கூறியுள்ளது.
இதில் இந்தியாவிற்கு உள்ள பங்கு குறித்த ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும், அவற்றை ஆய்வு செய்து பின்னர் தீர்ப்பளிப்பதாகவும் நிரந்த மக்கள் தீர்ப்பாயம் தெரிவித்திருக்கிறது.
திட்டமிட்ட இனப் படுகொலை:
இலங்கைப் போரின் போது சராசரியாக தினமும் 1000 பேர் வீதம் ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ள தீர்ப்பாயம், இது திட்டமிட்ட இனப்படுகொலை தான் என்றும், போருக்கு பிறகும் இலங்கையில் இனப்படுகொலை தொடர்வதாகவும் ஆதாரங்களுடன் கூறியிருக்கிறது.
தமிழீழம்:
தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என ஐ.நா. விதிகளில் குறிப்பிடப்பட்டிருப்பதால், இந்த கருத்தின் அடிப்படையிலேயே இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளைப் பிரித்து தமிழீழம் அமைக்க முடியும். இதற்கான ஏற்பாடுகளை ஐ.நா. மேற்கொள்ள வேண்டும் என்று நிரந்தர மக்கள் தீர்ப்பாயமும் அதன் பரிந்துரைகளில் தெரிவித்திருக்கிறது.
தகுந்த நடவடிக்கை:
இலங்கை இனப்படுகொலை தொடர்பான சந்தேக நிழல் இந்தியா மீதும் படிந்துள்ள நிலையில், இனப் படுகொலை குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதன் மூலம் தான் தன் மீதான சந்தேக நிழலை மத்திய அரசு போக்க முடியும். எனவே, இனப்படு கொலைக்கு துணை போகவில்லை என்பதை நிரூபிக்கவும், ஈழத்தமிழர் நலனை பாதுகாக்கவும் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
இனப்படுகொலை தீர்மானம்:
ஜெனிவாவில் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக இனப்படுகொலை விசாரணை நடத்துவதற்கான தீர்மானத்தை இந்தியா கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.
தேசிய இனமாக அறிவிக்கப்பட்டுள்ள ஈழத் தமிழினம் தங்களுக்கென தமிழீழம் என்ற புதிய நாட்டை உருவாக்குவதற்காக நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் அமைப்பின் மூலம் மேற்கொள்ள வேண்டும்.
இனப்படுகொலை நாள்:
தீர்ப்பாயம் பரிந்துரைத்திருப்பதைப் போல ஈழத் தமிழர்கள் கொத்துக்கொத்தாக படுகொலை செய்யப்பட்ட மே 18 ஆம் நாளை முள்ளிவாய்க்கால் நினைவு நாள் - சர்வதேச இனப்படுகொலைக்கு எதிரான நாள் என்று ஐ.நா. மூலம் அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications