இந்தியன் வங்கி ஏடிஎம்களில் இன்று முதல் ரூ2,000 நோட்டுகள் கிடைக்கும்!
இந்தியன் வங்கி ஏடிஎம்களில் இன்று முதல் ரூ2,000 நோட்டுகள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகம் முழுவதும் இந்தியன் வங்கி ஏடிஎம்களில் புதிய ரூ2,000 நோட்டுகள் கிடைக்கும் என்று அதன் பொதுமேலாளர் மணிமாறன் தெரிவித்துள்ளார்.
500, 2000 புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டபோதும் நாடு முழுவதும் மக்கள் கைகளுக்கு கிடைத்தபாடில்லை. இதனால் கடந்த 8 நாட்களாக மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு நாசமாகி உள்ளது.

இதனிடையே சென்னையில் இன்று இந்தியன் வங்கி பொதுமேலாளர் மணிமாறன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
இந்தியன் வங்கி ஏடிஎம்களில் ரூ2,000 நோட்டுகள் கிடைக்கின்றன. இன்று மாலைக்குள் அனைத்து இந்தியன் வங்கி ஏடிஎம்களிலும் ரூ2,000 நோட்டுகள் கிடைக்கும்.
இந்தியன் வங்கியில் இதுவரை மொத்தம் ரூ10,000 கோடி வைப்பு வந்துள்ளது. மேலும் 20 லட்சம் பேர் தங்களது வங்கி கணக்குகளில் இருந்து ரூ740 கோடி எடுத்துள்ளனர்.
வங்கி கணக்கில்லாத 8,79,000 பேர் இதுவரை ரூ314 கோடி அளவுக்கு பழைய ரூபாய் நோட்டுகளையும் மாற்றியுள்ளனர்.
இவ்வாறு மணிமாறன் கூறினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications