ராமேஸ்வரம் மீனவர்களை சுட்டது நாங்கள்தான்: கடலோர காவல்படை கமாண்டர் ராமாராவ் ஒப்புதல்
ராமேஸ்வரம் மீனவர்களை சுட்டது கடலோர காவல்படைதான் என அதன் கமாண்டர் ராமா ராவ் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: ராமேஸ்வரம் மீனவர்களை சுட்டது நாங்கள்தான் என கடலோரக் காவல்படை கமாண்டர் ராமாராவ் பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.
ராமேஸ்வரம் மீனவர்கள் இந்தி அல்லது ஆங்கிலம் பேசவில்லை என்ற காரணத்தை கூறி கடலோர காவல்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அந்தோணி பிச்சை, ஜான்சன் என்கிற 2 ராமேஸ்வரம் மீனவர்கள் படுகாயமடைந்தனர்.

சுட்டது கடலோர காவல்படை இல்லை
ஆனால் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனோ, மீனவர்களை சுட்ட குண்டு யாருடையது என தெரியாது என கூறியிருந்தார். தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும் நிர்மலா சீதாராமன் சொல்வது சரியே என கூறியிருந்தார்.

சுட்டது கடலோர காவல்படையே
இந்நிலையில் கடலோரக் காவல்படை கமாண்டர் ராமாராவ் தங்கச்சிமடத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராமேஸ்வரம் மீனவர்களை சுட்டது கடலோர காவல்படைதான். மீனவர்களால் மீட்கப்பட்ட 0.22 குண்டு கடலோர காவல்படைக்கு சொந்தமானதே.

காரணம் தெரியவில்லை
துப்பாக்கிச் சூடு நடத்திய அபாக்கா கப்பல் சென்னையைச் சேர்ந்தது. நடுக்கடலில் என்ன நடந்தது என்பது தெரியவில்லை. விசைப்படகை மீனவர்கள் நிறுத்தாமல் சென்றதால் துரத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்திருக்கலாம்.

நிர்மலா கருத்து
இது தொடர்பாக சென்னையில் விசாரணை நடைபெற்று வருகிறது. ரப்பர் குண்டு என கருத்தில் கொண்டு கடலோர காவல்படைக்குச் சொந்தமானது இல்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்திருக்கலாம்.
இவ்வாறு ராமாராவ் கூறினார்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications