இந்திய கடல் பகுதியில் இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: இந்தியக் கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடித்த 6 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தமிழக கடல் பகுதியில் சுமார் 158 கடல் மைல் தொலைவில் இந்திய கடலோர காவல் படையினர் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு இலங்கை மீனவர்கள், சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி, இந்திய கடல் பகுதியில் ஒரு விசைப் படகில் மீன் பிடித்துக் கொண்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கடலோர காவல் படையினர், அந்தப் படகில் இருந்த 6 மீனவர்களைக் கைது செய்தனர். மேலும் அந்த படகை பறிமுதல் செய்து, சென்னைக்கு சனிக்கிழமை கொண்டு வந்தனர். பின்னர் சென்னை துறைமுகம் காவல் நிலைய போலீஸாரிடம் 6 இலங்கை மீனவர்களையும், படகையும் ஒப்படைத்தனர்.
இதுதொடர்பாக துறைமுகம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications