பாலியல் சாமியார் ராம் ரஹீமிடம் ஆசி வாங்கிய கோஹ்லி... வைரலாகும் வீடியோ!
பாலியல் குற்ற வழக்கில் சிறைத் தண்டனை பெற்றுள்ள சாமியார் குர்மீத் ராம் ரஹீமிடம் அறிவுரை பெறும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
சென்னை : பாலியல் குற்ற வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ள சாமியார் குர்மீத் ரஹீமிடம் கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, தவான் உள்ளிட்டோர் பிரசன்னம் கேட்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
சாமியார் என்றால் காவி உடையில் தான் இருக்க வேண்டும், சந்நியாச வாழ்வு தான் வாழ வேண்டும் என்பதை உடைத்தவர் தேரா சச்சா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம். கலர் கலர் சட்டையில் உலா வந்து இசை ஆல்பம், சினிமா, பிரசன்னம் என அறிவுரை வழங்கி வந்த குர்மீத் ராம் ரஹீம், தனது ஆசிரமத்தில் உள்ள பெண் பக்தர்களை புனிதப்படுத்துவதாகக் கூறி பலாத்காரம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சுமார் 14 ஆண்டுகள் நடந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையே ராம் ரஹீம் குற்றவாளி என்று நீதிமன்றம் சொன்னதையடுத்து கலவரம் வெடித்ததையடுத்து அவர் யார் என்பதை தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வப்பட்டனர். இந்நிலையில் குர்மீத் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அறிவுரை வழங்கும் ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
வைரல் வீடியோ
சாமியார் ராம் ரஹீம் பிரசன்னம் செய்ய கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, ஷிக்கர் தவான், ஆஷிஷ் நெஹ்ரா மற்றும் முன்னாள் விக்கெட் கீப்பர் விஜய் தஹியா உள்ளிட்டோர் ராம் ரஹீமின் சொற்பொழிவை கேட்கின்றனர்.
பெருமை பீத்திய ராம் ரஹீம்
இதே போன்று ராம் ரஹீமின் மற்றொரு வீடியோவும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சினிமா ஸ்டார் போன்று உடையணிந்திருக்கும் ராம் ரஹீம் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது தவான், கோலி, மற்றும் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் ஆகியோர் தன்னுடைய பக்தர்கள் என்று சொல்லியிருக்கிறார்.
|
கண்டனம்
குர்மீத்தின் இந்த பேச்சை நினைவுப்படுத்தி பல்வேறு கண்டனங்கள் டுவிட்டரில் பதிவிடப்படுகின்றன. சிறந்த வீரர்கள் ஏன் இது போன்ற செயல்களை ஊக்குவிக்கின்றனர் என்று ஒரு நெட்டிசன் கவலை தெரிவித்துள்ளார்.
|
ஆதங்கம்
குர்மீத் ராம் ரஹீம் தன்னை கோலியின் பயிற்சியாளர் என்கிறார், இது உண்மையா அல்லது ஜோக்கா என்று ஒரு நெட்டிசன் கேட்டுள்ளார். பணம் சம்பாதிப்பதற்காக பல போலி குருமார்கள் இது போன்ற விளம்பரங்களைச் செய்து கொள்கின்றனர் என்று ஆதங்கப்பட்டுள்ளார் அவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications