ஒற்றுமை உணர்வு தழைக்க தியாக திருநாளில் உறுதி ஏற்போம்.. இந்திய தவ்ஹீத் ஜமா அத் வாழ்த்து
பக்ரீத் நாளில் அமைதியும், நல்லிணக்கமும், ஒற்றுமை உணர்வும் தழைக்க தியாக திருநாளில் உறுதி ஏற்போம் என்று இந்திய தவ்ஹீத் ஜமா அத் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை: இந்திய தவ்ஹீத் ஜமா அத் வெளியிட்டுள்ள பக்ரீத் பண்டிகை வாழ்த்துச் செய்தியில், 'அமைதியும், நல்லிணக்கமும், ஒற்றுமை உணர்வும் தழைக்க தியாக திருநாளில் உறுதி ஏற்போம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய தவ்ஹீத் ஜமா அத் துணைப்பொதுச்செயலாளர் முஹம்மது ஷிப்லி வெளியிட்டுள்ள அறிக்கை!

தியாகத் திருநாள் என்கிற பெருநாளை முஸ்லிம் சமுதாயம் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இந்நன்னாளில் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் சார்பில் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவிப்பதில் மகிழ்வுறுகிறேன்.
இப்ராஹீம் நபியின் வாழ்க்கையை மனித குலத்திற்கு படிப்பினையாக ஆக்கி, அவரது பாதையை முன்மாதிரியாக காட்டித் தருகிறான் இறைவன்.
படைப்புகள் கடவுள் அல்ல; படைத்தவனே கடவுள் என்ற கொள்கையை முன்வைத்து பிரச்சாரம் செய்ததால் ஏகத்துவ இமாம் இப்ராஹீம் நபி என அவரை முஸ்லிம்கள் போற்றுகிறார்கள். ஆயுதத்தை அவர் கையில் ஏந்தவில்லை; அறிவாயுதத்தை ஏந்தினார். மூட நம்பிக்கை களை அறிவுப்பூர்வமான வாதங்கள் மூலம் தகர்த்தெறிந்தார்.
சாதி, மதம், இனம், மொழி, பணக்காரன், ஏழை என எந்த ஏற்றத் தாழ்வுகளும் இல்லாமல் உலகளாவிய சகோதரத்துவத்தை, ஒற்றுமையை வலியுறுத்தும் சர்வதேச மாநாடான ஹஜ் கடமை நபி இப்ராஹீம் குடும்பத்தை மையப்படுத்தியே இன்று முஸ்லிம்கள் நிறைவேற்றி வருகிறார்கள். அதனால்தான் இப்ராஹீம் நபியை தனி மனிதர் என்று கூறாமல் அவர் ஒரு சமுதாயம் என இறைவன் அடையாளப்படுத்துகிறான்.
உலகம் இன்று அமைதியை தேடி அலைந்து கொண்டிருக்கிறது.சாதி மத ஏற்றத்தா ழ்வுகள்,உயிர்பலிகள்,பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை; பொருளாதார சுரண்டல், மத மோதல் கள், சுயநல அரசியல், மனித உரிமை மீறல்கள் என மனித விரோத செயல்கள் மலிந்து போனதால் பூமிப் பந்தில் அமைதி தொலைந்து கொண்டிருக்கிறது.
இந்த அமைதி தொலைந்து போக காரணமான மனித குல விரோதிகளை அடையாளம் கண்டு வேரறுப்போம்; வகுப்புவாத சக்திகளை இனம் கண்டு தனிமைப்படுத்துவோம்;பயங்கர வாதம் எந்த வடிவில் வந்தாலும் அதனை வீழ்த்த தியாகம் செய்வோம்.
மனித உரிமை மீறல்க ளுக்கு எதிராக அறப்போர் புரிவோம்; இந்தியா ஜனநாயக தன்மையை இழந்துவிடாமல் காக்கும் பணியில் நம்மை அர்ப்பணிப்போம். இதற்காக எந்த தியாகத்தையும் செய்ய, அமைதியும், நல்லிணக்கமும், ஒற்றுமை உணர்வும் தழைக்க இந்த தியாக திருநாளில் உறுதி ஏற்போம்." என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications