காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற ராகுல்காந்திக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வாழ்த்து!
காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள ராகுல்காந்திக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் முஹம்மது ஷிப்லி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை: காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள ராகுல்காந்திக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் முஹம்மது ஷிப்லி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

பாரம்பரியமிக்க காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்று இருக்கிறார்.அவரது தலைமையில் காங்கிரஸ் கட்சி சிறப்பாக செயல்பட வாழ்த்துகிறேன்.
இந்தியாவில் மத வெறுப்பு அரசியலை முன்வைத்து ஆட்சி நடத்துபவர்களிடமிருந்து இந்தியாவை காப்பாற்ற வேண்டிய முக்கிய பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது என்பதை கவனத்தில் கொண்டு தனது செயல்பாடுகளை அமைத்து கொள்ள வேண்டும்.மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து இந்தியாவின் பாரம்பாரியத்தை காக்க காங்கிரஸ் முன்வர வேண்டும்.
உலக அரங்கில் இந்தியாவிற்கு களங்கத்தை ஏற்படுத்தியது பாபரி மஸ்ஜித் இடிப்பு.அன்றைய காங்கிரஸ் கட்சியின் பிரதமர் நரசிம்மராவ் மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி பாபரி மஸ்ஜித் மீண்டும் கட்டப்பட்டு முஸ்லீம்களிடம் ஒப்படைத்து களங்கத்தை போக்க வேண்டும். இவ்வாறு முஹம்மது ஷிப்லி தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications