ஒன்றே குலம் என்றும் ஒருவனே தேவன்’ இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கிறிஸ்துமஸ் வாழ்த்து!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொகிதீன் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொகிதீன் கிறிஸ்தவ மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலக முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவரும், மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது,
கிறிஸ்துவ சகோதர சகோதரிகளுக்கு இதயப்பூர்வமான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
அகிலத்து மக்கள் அனைவரும் ஆதாம் ஏவாளுக்குப் பிறந்தவர்கள் என்பதால், மானிட சமுதாயம் ஒரு பெரும் குடும்பமே ஆகும்.
அந்த மாபெரும் மனிதக் குடும்பமே, நாடுகளாகவும், இனங்களா கவும், சமுதாயங்களாகவும், குலம் கோத்திரங் களாகவும், தனித் தனிக் குடும்பங்களாகவும், பிரிந்து வாழ்கின்றது.
உண்மையில், எல்லோரும் - நாமும், நமக்கு முன்னிருந்தோரும், நமக்குப் பின்னர் வருவோரும் - ஒரு பெரும் மானிட குடும்ப சாகரமே அன்றி வேறில்லை. இதனைத்தான் தமிழகத்துச் சித்தர்கள் 'ஒன்றே குலம் என்றும் ஒருவனே தேவன்' என்றும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்துள்ளார்கள்.
இந்தத் தத்துவத்தை எல்லா சமுதாய மக்களும், எல்லா சமயத்தவரும், எல்லா தேசத்தவரும் உணர வேண்டும் என்றே ஏசு பெருமான் போதித்தார்; அதே போதனையையே உலகத் தீர்க்கதரிசிகள் யாவரும் வலியுறுத்தினர்.
சாதிச் சழக்கங்களுக்கும், சமயப் பூசல்களுக்கும், வகுப்பு துவேசங்களுக்கும், இன மோதல்களுக்கும் இதயத்தில் இடமளிக்காமல் வாழும் நன்னெறியில் நிலைத்து நிற்க அனைவரும் பாடுபடுவோம்! இவ்வாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications