• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருச்சியில் டிசம்பர் 28ல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அரசியல் விழிப்புணர்வு மாநாடு- பேரணி

By Chakra
|

திருச்சி: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மற்றும் அரசியல் விழிப்புணர்வு மாநில மாநாடு டிசம்பர் 28ம் தேதி சனிக்கிழமை மாநிலத் தலைவரும், தேசியப் பொதுச் செயலாளருமான பேராசிரியர் கே.எம். காதர் மைதீன் தலைமையில் திருச்சியில் நடைபெறுகிறது. இம் மாநாட்டையொட்டி திருச்சி மாநகரில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இம் மாநாட்டின் துவக்க நிகழ்வாக பயங்கரவாதத்தை எதிர்த்தும், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தியும், இளம் பிறை எழுச்சி பேரணி நடைபெறுகிறது. 28ம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்தை அடுத்துள்ள வெஸ்டரி பள்ளிக் கூடம் அருகிலிருந்து புறப்படும் இப்பேரணி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தை சென்றடைகிறது.

KM Kader Mohideen

எஸ்.டி.யு. மாநில பொதுச் செயலாளர் கே.எம். நிஜாமுதீன், எம்.ஒய்.எல். மாநிலச் செயலாளர் எம்.கே.முஹம்மது யூனுஸ், எம்.எஸ்.எஃப். மாநிலச் செயலாளர் வி.ஏ.செய்யது பட்டாணி ஆகியோர் தலைமை வகித்துச் செல்லும் இப் பேரணியை அந்த அணிகளின் நிர்வாகிகளும், திருச்சி மாநகர், புறநகர் மாவட்ட நிர்வாகிகளும் ஒருங்கிணைக்கின்றனர்.

முஸ்லிம் யூத் லீக், முஸ்லிம் மாணவர் பேரவை, சுதந்திர தொழிலாளர் யூனியன் அமைப் புக்களை சேர்ந்த செயல் வீரர்கள் சீருடையில் முதலில் அணி வகுத்து வருகின்றனர். அவர்களைத் தொடர்ந்து பைத் சபாக்கள், இசைக் குழுவினர்கள் இன்னிசை வழங்குகின்றனர்.

அதனைத் தொடர்ந்து 43 மாவட்டங்களின் செயல் வீரர்களும் தங்கள் மாவட்ட பேனர்களுடன் பச்சிளம் பிறைக்கொடிகளை ஏந்தி கம்பீரமாக அணி வகுத்து வருகின்றனர்.

முன்மாதிரி மஹல்லாக்களுக்கு விருது

பேரணி நிறைவு பெற்றதும் மாநாட்டு நிகழ்வுகள் துவங்கும். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடைபெறும் இம் மாநாட்டில் திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் மவ்லானா முஃப்தி உமர் பாரூக் மழாஹிரி இறைவசனங்களை ஓதுகிறார்.

அல்லாமா டாக்டர் தைக்கா சுஐபு ஆலிம், மவ்லானா இ. சாகுல் ஹமீது பாகவி ஹள்ரத், குர்ஆனின் குரல் ஆசிரியர் மவ்லானா முஹம்மது அஸ்ரப் அலி, மவ்லானா டி.ஜே.எம். ஸலாஹுதீன் ரியாஜி, மவ் லானா எம்.எஸ்.உமர் பாரூக் தாவூதி, மவ்லானா ஏ.முஹம்மது இஸ்மாயில் ஹள்ரத், மவ்லானா தளபதி ஷபீகுர் ரஹ்மான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கு கின்றனர்.

அதனைத் தொடர்ந்து முன்மாதிரி மஹல்லா ஜமாஅத் களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட உள்ளன. சமுதாயப் பிரமுகர்களான இ.டி.ஏ. செய்யது எம். சலாஹுதீன், மலேசியா டத்தோ மாயீன் பரகத் அலி, நாகூர் ஆலியா முஹம்மது ஷேக் தாவூத், திருச்சி ஏ.கே. காஜா நஜ்முதீன், காயல்பட்டினம் வாவு செய்யது அப்துல் ரஹ்மான், நோபிள் மரைன் சாகுல் ஹமீது, திருச்சி எம்.ஏ.எம். கல்வி குழுமத்தின் செயலாளர் எம்.ஏ. முஹம்மது நிஜாம், புருணை முஹம்மது யூனுஸ், சங்கரன்பந்தல் எம். முஹம்மது அலி நிஜாமி, கீழக்கரை சீனா தானா செய்யது அப்துல் காதர்,

எம்.ஐ.இ.டி. கல்விக்குழு நிறுவனர் ஏ. முஹம்மது யூனுஸ், எஸ்.டி. கூரியர் கே. நவாஸ்கனி, விருதுநகர் ஹோட்டல் இப்றா ஹீம் ஷா, முஹம்மது சதக் கல்விக்குழும தலைவர் முஹம்மது யூசுப், ஏ.எம்.எஸ். கல்விக்குழும செயலாளர் எஸ். சேகு ஜமாலுதீன், தமிழ்நாடு ஹஜ் சர்வீசஸ் சொசைட்டி செயலாளர் முஹம்மது அப்ஸல், தமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப்பினர் புரசை எம். சிக்கந் தர், குவைத் புரவலர் அப்துல் காதர் என்ற டெல்லி பாதுஷா, பிளாக் துளிப் எம்.எம். எஹ்யா, புருணை அப்துல் நசீர், அரங் கக்குடி ஒய்.எம். ஹபீபுர் ரஹ் மான், ஆர்.டி.பி. கல்லூரி தலைவர் எம்.ஏ. தாவூத் பாஷா, அஸ்ஸலாம் பொறியியல் கல்லூரி தலைவர் எம்.ஜே. ஜமால் முஹம்மது இப்றாஹீம் ஆகியோர் இந்த விருதுகளை வழங்குகின்றனர்.

மஹல்லா ஜமாஅத் தீர்மானங்களை காயிதெ மில்லத் பேரவை நிர்வாகிகளான அமீரகத்தின் குத்தாலம் ஏ. லியாகத் அலி, தாய்லாந்தின் வாவு எம்.எம். சம்சுதீன், குவைத் தின் காரைக்கால் எஸ்.எம். ஆரிப் மரைக்காயர், சிங்கப்பூ ரின் நாகூர் முஹம்மது கௌஸ் மரைக்காயர், கத்தாரின் காயல் கே.வி.ஏ.டி. ஹபீப் முஹம்மது, ஹாங்காங்கின் எஸ்.எச். அபுல் ஹசன், சவூதியின் லால்பேட்டை எஸ்.எம். முஹம்மது நாசர் ஆகியோர் முன் மொழிகின்றனர்.

அரசியல் விழிப்புணர்வு மாநாடு

மஃரிப் தொழுகை இடைவேளைக்குப் பிறகு அரசியல் விழிப்புணர்வு மாநாடு தொடங்குகிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் வரவேற்புரை நிகழ்த்துகிறார். காயிதெமில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., துவக்க உரையாற்றுகிறார். மாநிலப் பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான், தேசிய துணைச் செயலாளர் எச். அப்துல் பாஸித், மாநிலச் செய லாளர்கள் நெல்லை அப்துல் மஜீத், திருப்பூர் எம்.ஏ. சத்தார், வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன், ஆடுதுறை ஏ.எம். ஷாஜஹான் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

மாநில துணைச் செயலா ளர்களான வி.டி.எஸ்.ஆர். முஹம்மது இஸ்மாயில், கே. ஷபீர் அஹமது, மில்லத் எஸ்.பி. முஹம்மது இஸ்மாயில், நரி என். முஹம்மது நயீம், ஜி.எம். ஹாஷிம், ஆப்பனூர் ஜபருல் லாஹ், எஸ்.ஏ. இப்றாஹீம் மக்கீ, மாநில மகளிரணி அமைப்பாளர் பேராசிரியர் எஸ்.ஏ. தஸ்ரீப் ஜஹான், திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் கே.எம்.கே. ஹபீபுர் ரஹ்மான், மாநகர் மாவட்ட செயலாளர் என். பீர் முஹம்மது ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிகின்றனர்.

தலைவர்களின் சிறப்புரை

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொருளாளரும், கேரள அமைச்சருமான பி.கே. குஞ்ஞாலிகுட்டி, தேசியச் செயலாளர் இ.டி. முஹம்மது பஷீர் எம்.பி., கேரள மாநில பொதுச் செயலாளர் கே.பி.ஏ. மஜீத் ஆகியோர் சிறப்புரை யாற்றுகின்றனர்.

தேசியத்தலைவரும், மத்திய வெளியுறவுத்துறை இணைய மைச்சருமான இ. அஹமது சாஹிப் மாநாட்டு நிறைவு பேருரையாற்றுகிறார். மாநிலச் செயலாளர் காயல் மகபூப் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார். திருச்சி புறநகர் மாவட்ட தலைவரும், மாநாட்டு ஏற்பாட்டு குழு தலைவருமான வி.எம். பாரூக் நன்றி கூறுகிறார். மாநகர் மாவட்ட துணைத் தலைவர் ஹாபிழ் அலிமுத்தீன் நிறைவாக துஆ ஓதுகிறார்.

மாநாட்டு ஏற்பாடுகள் தலைவர், பொதுச் செயலாளர் ஆய்வு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் இருமுறை திருச்சி சென்று மாநாட்டு பணிகள் குறித்து நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டறிந்து ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் மூன்றாவது முறையாக நேற்று திருச்சி சென்று மாநாட்டு பணிகளை பார்வையிட்டு முடுக்கி விட்டார். உழவர் சந்தை மைதானத்தை பொக்லைன் எந்திரங்கள் மூலம் சீரமைக்கும் பணிகளை பார்வையிட்டார். ஊர்வலம் துவங்கும் இடத்தையும் பார்வையிட்டு தகுந்த ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் மாநாட்டு அலுவலகத்தில் வி.எம். பாரூக் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இதுவரை நடைபெற்று வந்துள்ள மாநாட்டுப் பணிகள், இனி செய்ய வேண்டிய பணிகள் குறித்து கே.எம்.கே. ஹபீபுர் ரஹ்மான், வி.எம். பாரூக், ஜி.எம். ஹாஷிம் உள்ளிட்ட நிர்வாகிகள் எடுத்துக் கூறினர்.

மாநாட்டு திடலிலும், ஊர்வலப்பாதையிலும் செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்து மாநிலச் செயலாளர் ஆடுதுறை ஏ.எம். ஷாஜஹான் விளக்கி கூறினார். மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் தமிழகம் முழுவதிலுமிருந்து இப் பேரணிக்கு வருகை தரக்கூடிய வர்கள் குறிப்பிட்ட நேரத்தில் குறித்த இடங்களுக்கு வருகை தரும் வகையில் அவர்களுக்கு முறையான வழிகாட்டுதல்கள் செய்யப்பட வேண்டும். குறிப்பாக பேரணிக்கு அவர்கள் அனைவரும் பங்கேற்கின்ற வகையில் தடுக்கப்படாமல் உரிய முன்னெச்சரிக்கையோடு பணிகளை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இம் மாநாட்டிற்கான அழைப்பிதழை அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் அளிக்க மவ்லவி உமர் பாரூக் மழாஹிரி, செயலாளர் பீர் முஹம்மது, அரசு அதிகாரிக ளுக்கு வழங்க அம்ஜத் இப்றா ஹீம், ஓய்வு பெற்ற தாசில்தார் அப்துல் அஜீஸ், அனைத்து சமுதாய தலைவர்களுக்கு

கொடுக்க என்.கே. அமீருதீன், அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகளுக்கு கொடுக்க அப்துல் மஜீத், வியாபாரிகளுக்கு அழைப்பு கொடுக்க எம்.கே.எஸ். ஜமால், பத்திரிகையாளர்களுக்கு வழங்க மணிச்சுடர் எம்.கே. சாகுல் ஹமீது, நன்கொடையாளர்கள் மற்றும் பெருந்தகைகளுக்கு வழங்க வழக்கறிஞர் ஜி. ஏ. மன்னான் ஆகியோர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த கூட்டத்தில் மாநில செயலாளர் ஆடுதுறை ஷாஜகான், மாநில துணைச் செயலாளர்கள் ஜி.எம். ஹாஷிம், எஸ்.ஏ. இப்றாஹீம் மக்கீ, மாநகர தலைவர் உமர்பாரூக் முப்தி, மாநகர செயலாளர் பீர் முஹம் மது, புறநகர் மாவட்ட செயலா ளர் கே.எம்.கே. ஹபிபுர் ரஹ் மான், மாநகர பொருளாளர் அமீருதீன், புறநகர் மாணவரணி அமைப்பாளர் அஜீம், மாநகர மாணவரணி அமைப்பாளர் அன்சர் அலி, மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் ஜஹாங்கீர் பாட்ஷா, மாநகர துணை அமைப்பாளர்கள் சாகுல் ஹமீது, முஹம்மது ரபீக், தொழிலாளர் அணி அமைப்பாளர் அப்துல் மஜீத், புறநகர் மாவட்ட துணைச் செயலாளர்கள் பிர்தௌஸ், இனாம்குளத்தூர் முஹம்மது அலி, மாநாட்டு நிர்வாகக் குழுத் தலைவர் வக்கீல் மன்னான், துணைத் தலைவர், அம்ஜத் இப்ராஹிம், மாநகர துணைச் செயலாளர்கள் சர்தார் என்ற ஷேக் பாவா மைதீன், காதர் உசேன், ஏர்போர்ட் நிஜாம், டைமண்ட் காஸிம், தலைமை கழக பேச்சாளர் எம்.கே.எஸ் ஜமால், ஷேக் ரப்பானி, சாதிக் பாட்ஷா மற்றும் அனைத்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வரும் 27-ம் தேதி மாநாட்டின் ஒவ்வொரு குழுக்களின் ஆலோசனை கூட்டங்களும் மாநாட்டுத் திடலில் நடைபெறுகிறது.பேரணி ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள முஸ்லிம் யூத் லீக், முஸ்லிம் மாணவர் பேரவை மற்றும் திருச்சி மாவட்டத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட 100 இளைஞர்களின் சீருடை முன்னோட்ட நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மாநாடு தொடர்பாக தலைநகர் சென்னையிலும், திருச்சியிலும் பத்திரிகையாளர் சந்திப்புகள் நடைபெறுகின்றன.மாநில துணைச் செயலாளர் ஜி.எம். ஹாஷிம், தலைமையில் முசிறி, துறையூர் மற்றும் திருச்சியைச் சுற்றியுள்ள பகுதிகளில் அனைத்து மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகளுக்கு மாநாட்டு அழைப் பிதழை கொடுக்கப்பட்டு வருகிறது.

இம் மாநாட்டையொட்டி தமிழகம் முழுவதும் 43 மாவட்டங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஊர்கள் தோறும் தெருமுனைப் பிரச் சாரங்கள் நடைபெற்று வருகின்றன. பல்லாயிரக்கணக்கான வாகனங்களில் செயல் வீரர்கள் இம் மாநாட்டிற்கு வருகை தருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Indian Union Muslim League will hold a massive political awarenwess public meeting and rally at Trichy on December 28. Lakhs of muslims from various parts of Tamil Nadu and all over the the country are expected to participate in the event.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more