திருப்பூர்: குடிபோதையில் மயங்கிய தாய்... பசியில் பலியான பச்சிளம் குழந்தை
திருப்பூர்: மதுவின் கொடுமைக்கு எதிராக தமிழகத்தில் அரசியல் கட்சியினர் போராடி வரும் நிலையில், மது போதையால் பச்சிளம் குழந்தை மரணமடைந்த சம்பவம் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போதையில் மயங்கிய பெண்ணின் பெயர் மலர்க்கொடி என்பதாகும். இவர் உடுமலைப்பேட்டை அமராவதி நகரைச் சேர்ந்த நடராஜ் என்பவரின் மனைவியாவார். இவருக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை இருந்தது. மலர்க்கொடிக்கு குடிப்பழக்கம் இருந்தது. நேற்று உடுமலைப்பேட்டை பேருந்துநிலையம் அருகே குடிபோதை அதிகமாகவே மலர்கொடி தூங்கி விட்டதாகக் கூறப்படுகிறது. மலர்க்கொடியின் ஒரு வயது குழந்தை அழுது அழுது பசியால் மயக்கம் அடைந்தது.

குழந்தையும், தாயும் நீண்ட நேரம் மயக்க நிலையில் கிடந்ததையடுத்து, அவர்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர், குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
குடிபோதையில் இருந்த குழந்தையின் தாய் மலர்க்கொடி மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன்னர் மேட்டூரில் மதுபோதையில் மயங்கிய தந்தையால் இரண்டு குழந்தைகள் பசியால் அலறி துடித்தனர். அவர்களை மீட்டு போலீசில் ஒப்படைத்தனர். இந்த நிலையில் உடுமலைப்பேட்டையில் பெண் ஒருவர் மதுபோதையில் மயங்க பச்சிளம் குழந்தை பரிதாபமாக பலியாகியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications