• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கேரள மக்களுக்கு உதவுவதே பக்ரீத் திருநாளின் அம்சம்.. காதர் மொகிதீன்

|

திருச்சி: வெள்ளத்தில் மூழ்கி துன்பப்படும் கேரள மக்களுக்கு வெள்ள நிவாரண உதவிகள் செய்வது பக்ரீத் தியாகத் திருநாளின் அம்சம் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் அனைவருக்கும் பக்ரீத் திருநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் பக்ரீத் தியாகத் திருநாள் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

 Inidan Union Muslim League National President Prof. K.M.Kader Mohideen wishes Bakrid festival

செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: புனித ஹஜ்ஜு பெருநாள், ஈதுல் அல்ஹா, பக்ரீத் பண்டிகை என்றெல்லாம் அழைக்கப்படும் தியாகத் திருநாளை உலக முஸ்லிம்கள் அனைவரும் கொண்டாடுகின்றனர்.

உருவமற்ற ஒரே இறைவனை வணங்குவதற்கென்று உருவாக்கப்பட்ட உலகின் முதல் பள்ளி வாயிலான கஃபாவை உடம்பின் மேலே ஒரு துண்டுடனும், கீழே ஒரு முண்டுடனும் வலம் வருவதிலும், அரஃபா பெருவெளியில் லட்சோப இலட்சம் ஹாஜிகளுடன் இறை தியானத்தில் ஈடுபடுவதும், புனித ஹஜ் கடமையின் அங்கங்களாகும். இந்நாளில் உயிரோட்டமாக உள்ள அம்சம் தியாகமே.

வன்முறை பெருகி, வரம்புகளற்ற வாழ்க்கையால் விளையும் சமூக கேடுகளை புறந்தள்ளி, மானிடநேய மாண்புக்குரிய மரபுகளையும், நல்லிணக்க கடமைகளையும் நிலை நிறுத்துவதற்கு தியாகம் செய்ய வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.

கடந்த சில தினங்களாக கேரள மாநிலம் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கால் பெரும் கஷ்டத்தில் மூழ்கி கொண்டிருக்கிறது. அவதிப்படும் மக்களின் துயர் துடைப்பதும், காலத்தால் செய்யும் கடமையாகும். எல்லோரும் தங்களால் இயன்ற வகையில் எல்லாம் வெள்ள நிவாரணத்திற்கு உதவிகள் புரிவதும் தியாகத்திருநாளின் அம்சமே ஆகும்.

உதவுவோம், துயர் துடைப்போம், மக்களின் நல்வாழ்வுக்கு துணை புரிவோம். அனைவருக்கும் இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள்" என்று பேராசிரியர் கே.எம். காதர்மொய்தீன் தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

lok-sabha-home

 
 
 
English summary
Inidan Union Muslim League National President Prof. K.M.Kader Mohideen wishes Bakrid festival. and also He request to all to help Kerala.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more