காங், தமாகா, ததேமக, ததேமு, ததேக, அதிமுக.... இனியன் சம்பத்தின் அரசியல் அடையாளங்கள்
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் தம்பி இனியன் சம்பத் தம்முடைய தமிழ் தேசிய கட்சி(ச)யை கலைத்துவிட்டு அதிமுகவில் இன்று இணைந்துள்ளார்.
இனியன் சம்பத் தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றியவர். 1989-ல் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும், பின்னர் கட்சியின் மாநில செயலாளராகவும் அவர் பதவி வகித்தார்.

பின்னர் மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸில் இணைந்தார். தமாகா காங்கிரஸில் இணைந்த போது மீண்டும் காங்கிரஸுக்கு தாவினார்.
2011-ல் தமிழ் தேசிய மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கினார். பின்னர் தனது கட்சியை பழ. நெடுமாறனின் தமிழர் தேசிய முன்னணியுடன் இணைத்து அந்த முன்னணியின் பொதுச்செயலாளராக பதவி வகித்தார்.

தாம் தமிழ்த் தேசியம் பேசுபவர்; தாயார் மறைந்த சுலோச்சனா சம்பத் திராவிட தேசியம் பேசுகிறவர்; அண்ணன் இளங்கோவன் இந்திய தேசிய பேசுபவர் எனவும் இனியன் சம்பத் கூறிவந்தார்.
இந்த நிலையில் தமிழ்த் தேசிய முன்னணியில் இருந்து விலகி தமிழ்த் தேசிய கட்சி (சம்பத்) என்ற புதிய கட்சியை கடந்த ஆண்டு இனியன் சம்பத் தொடங்கினார்.
தற்போது இந்த கட்சியையும் கலைத்து விட்டு முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியமாகி உள்ளார் இனியன் சம்பத்.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications