முதல்வரின் துணைச் செயலாளரானார் தனிப் பிரிவு சிறப்பு அதிகாரி இன்னொசென்ட் திவ்யா
சென்னை: முதல்வரின் தனிப் பிரிவு அதிகாரியாக செயல்பட்டு வந்த இன்னொசென்ட் எப். திவ்யா, முதல்வர் ஜெயலலிதாவின் துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐஏஎஸ் அதிகாரியான திவ்யா இதுவரை முதல்வரின் தனிப் பிரிவு சிறப்பு அதிகாரியாக செயல்பட்டு வந்தார். இந்த பிரிவு சிறப்பாக செயல்படுவதாக ஏற்கனவே பேச்சு உள்ளது. முதல்வரும் இந்த சிறப்புப் பிரிவின் செயல்பாடுகளை நேரடியாகவே கண்காணித்தும் வருகிறார்.

இந்த நிலையில் தற்போது திவ்யா, முதல்வரின் துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான உத்தரவினை தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் பிறப்பித்துள்ளார்.
அதில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தனிப்பிரிவின் சிறப்பு அதிகாரியாக பணியாற்றி வந்த இன்னொசென்ட் திவ்யா ஐ.ஏ.எஸ்., முதல்வரின் துணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
முதல்வரின் துணைச் செயலாளராக இருந்த ஆர்.சுடலைகண்ணன் ஏற்கனவே பணியிட மாற்றம் செய்யப்பட்டு விட்டார்.
முதல்வரின் துணைச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள இன்னொசென்ட் திவ்யா, மறு உத்தரவு வரும் வரை முதல்வர் தனிப் பிரிவின் சிறப்பு அதிகாரியாகவும் முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications