திருச்செந்தூர் கோவில் தரிசன கட்டணத்தில் முறைகேடு- திடீர் ஆய்வால் ஊழியர்கள் திகைப்பு
நெல்லை: திருச்செந்தூர் கோயிலி சிறப்பு தரிசன கட்டணத்தில் முறைகேடு நடப்பதாக தெரிய வந்ததால் அங்கு அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இது ஊழியர்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வர். பக்தர்கள் வசதிக்காக சிறப்பு தரிசன கட்டண வசதி உள்ளது. இது தவிர காது குத்தல், முடிகாணிக்கை என தனித்தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

நாழிக் கிணறில் குளிப்பதற்கு தனி கட்டணம், கோயில் வாளகத்தில் தங்கும் விடுதிகளும் உள்ளன. இதன் மூலம் கோயிலுக்கு ஆண்டுதோறும் சுமார் 22 கோடி ரூபாய் வருமானம் கிடைத்து வருகிறது. சமீபகாலமாக சிறப்பு தரிசன கட்டணத்தில் முறைகேடு நடப்பதாக பக்தர்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதன் அடிப்படையில் நெல்லை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் லட்சுமணன் தலைமையில் 10 அதிகாரிகள் கொண்ட 30 பேர் திடீரென கோயிலில் சோதனையில் ஈடுபட்டனர்.
சிறப்பு தரிசன கவுண்டர், காது குத்தும் இடம், முடிகாணிக்கை, நாழிக்கிணறு, பக்தர்கள் தங்கும் விடுதி ஆகியவற்றில் முறையாககட்டணம் வசூல் செய்யப்படுகிறதா என அவர்கள் விசாரணை நடத்தினர். இந்த சோதனையின் போது திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர் வரதராஜன் உடன் இருந்தார். இந்த திடீர் சோதனையால் அங்கு பணியில் இருக்கும் ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications