நெல்லை மாவட்டத்தில் கடற்படை வார விழா - 29ந் தேதி சாகச நிகழ்ச்சி!!
நெல்லை: இந்திய கடற்படை தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் கிராமத்தில் கடற்படை சாகச நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
ஆண்டுதோறும் டிசம்பர் 4ந் தேதி கடற்படை தினம் கொண்டாடுப்படுகிறது. இதை ஒரு வாரம் காலம் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம்.
இந்திய கடற்படையின் தென்பகுதி கண்காணிப்பு மையம் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இருந்து 14 கிமீ தொலைவில் விஜயநாராயணம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. இதன் தொடர்பு நிலையம் பாளையங்கோட்டையில் உள்ளது.
ஐஎன்எஸ் கட்டபொம்மன் கடற்படை மையம் சார்பிலும் கடற்படை வார விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் கடற்படை வார விழாவை முன்னிட்டு வரும் 23ந் தேதி காலை நாகர்கோவில் கிருஷ்ணகுமார் எலும்பு முறிவு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
சிறப்பு நிகழ்ச்சியாக வரும் 29ந் தேதி விஜயநாராயணம் ஐஎன்எஸ் கட்டபொம்மன் வாளகத்தில் கடற்படை ஹெலிகாப்டர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இந் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
கடற்படை கப்பல்கள் மாதிரிகள், கண்காட்சிகள் போன்றவையும் நடைபெறுகின்றன. இதனை பார்வையிட பள்ளி, கல்லூரிகளுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஐஎன்எஸ் கடற்படை தளத்திற்கு வந்து விமான, ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சியை பார்வையிடலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications