'அம்மாவுக்கு' சல்யூட்.. அட ஒபாமா...!

Subscribe to Oneindia Tamil

சென்னை: போஸ்டர் அடிப்பதிலும் அதில் வாசகங்களைப் போடுவதிலும் நம்மவர்கள் சில நேரங்களில் மயிர்க்கூச்செறிய வைத்து விடுவார்கள்.. போடும் வாசகங்களைப் பார்த்தால் புல்லரித்துப் போய் விடும். அதிலும் சமீப காலமாக விதம் விதமான நூதன வாசகங்கள், படத்துடன் கூடிய போஸ்டர்கள் அரசியல்வாதிகள் கையில் சிக்கி அல்லோகல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அப்படி ஒரு விசேஷத்தை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி அவரது கட்சியினரும், 'அம்மா'வின் பக்தர்களும் போஸ்டர்கள் மூலம் கலக்கியதைப் பார்க்க நேரிட்டபோது அப்படியே ஸ்வீட் ஷாக்காகிப் போய் விட்டது.

அப்படி ஒரு கிரியேட்டிவிட்டி.. அசத்தல் வாசகங்களை அதில் காண முடிந்தது. அது குறித்த ஒரு ரவுண்டப்...

உலகத் தலைவர்கள் போற்றும்...

உலகத் தலைவர்கள் போற்றும்...

ஒரு போஸ்டரில் உலகத் தலைவர்கள் போற்றும் ஒப்பற்ற தலைவியே என்ற வாசகத்துடன் ஜெயலலிதா படம்.. கீழே ஒபாமா முதல் புடின் வரை அத்தனை உலகத் தலைவர்களும் கூடி நின்று கை தட்டிப் பாராட்டுவது போல ஒரு செம ஸ்டில்.... அட வட கொரியா அதிபர் கிம் ஜோங் உன் கூட கை தட்டிப் பாராட்டுகிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்..கோவை பக்கம் இதைப் பார்க்க முடிந்தது.

அன்பின் துலாபாரம்

அன்பின் துலாபாரம்

அடுத்து அன்பின் துலாபாரம்.. அதாவது பெரிய தராசைப் போட்டு ஒரு பக்கம் 'அம்மா'வும், நாடாளுமன்றம் மற்றும் கரன்சி நோட்டுக்கள்.. அதற்குக் கீழே பாராளுமன்றத்துக்கே இறங்காத பாரம்... என்று வாசகம். மறுபக்கம், 'அம்மா' மற்றும் தராசின் மறுபக்கம் ஏழைகளின் குறை கூறும் மனுக்கள் படம்.. கீழே பரிதவிக்கும் ஏழைகளுக்கு இறங்கும் 'அம்மா' நீ அபாரம்.. என்று வாசகம்.

'இங்கிலிபீஸில்' ஒரு பாராட்டு

'இங்கிலிபீஸில்' ஒரு பாராட்டு

இன்னொரு பேனர் இது. முழுக்கமுழுக்க ஆங்கில வார்த்தைகள்.. என்ன ஒரு சின்னக் குழப்பம்னா.. ஜெயலலிதாவை 'கிங்' என்று போட்டு விட்டார்கள்.. 'க்வீன்' என்று போட்டிருக்கலாம்.. பாவம், அவங்களே கன்பீஸ் ஆயிட்டாங்க போல...!

'அம்மாவுக்கு' அட்டேன்ஷனில்.. சல்யூட்.. அட ஒபாமா...!!!

'அம்மாவுக்கு' அட்டேன்ஷனில்.. சல்யூட்.. அட ஒபாமா...!!!

இப்படி ஒரு பேனரைப் பார்க்க முடிந்தது.. அதாவது ஜெயலலிதா நடு நாயகாக நடந்து வருகிறார். இரண்டு பக்கமும் உலகத் தலைவர்கள் அட்டேன்ஷனில் நிற்கிறார்கள். ஜெயலிதாவுக்கு வலது புறம் ஒபாமாவும், ஜார்ஜ் புஷ்ஷும்... இடதுபுறம் ஜப்பான் பிரதமர் உள்ளிட்டோர். அனைவரும் வி சல்யூட் யூ என்று சொல்வது போல வாசகம்... ஜப்பான் பிரதமர் கை கூப்பி வணக்கம் போடுகிறார்... மேலே பன்ச் லைன்.. 'ஈஸ்ட் ஆர் வெஸ்ட்.. அம்மா இஸ் பெஸ்ட்'.. என்று...

தாம்பரத்திலிருந்து நாராயணசாமி.. 'ஹார்ட்டில் அம்மா'...!

தாம்பரத்திலிருந்து நாராயணசாமி.. 'ஹார்ட்டில் அம்மா'...!

தாம்பரத்தைச் சேர்ந்த நாராயணசாமி என்று ஒரு தொண்டர்.. அவரை அப்படி சொல்லவே கூடாது. பக்தர் என்றுதான் கூற வேண்டும்.. தனது இதயத்தைக் கிழிப்பது போல போஸ் கொடுத்து உள்ளே ஜெயலலிதா இருப்பதாக சித்தரித்து போஸ்டர் போட்டு அசத்தியுள்ளார்....

எல்லாம் கைவித்தைதான்...!

எல்லாம் கைவித்தைதான்...!

இப்படி விதம் விதமான கிரியேட்டிவ் கலக்கல்களைப் பார்த்தபோது போட்டோஷாப்பைக் கண்டுபிடித்தவனுக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்து குலவையிட்டு பொங்கலிட்டு... பாட்டுப் பாடி ஆட வேண்டும் என்று தான் தோன்றுகிறது...

எல்லாம் கைவித்தைதான்....!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+