தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு... சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தின் உள்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 4 மாதங்களாக தென்னிந்தியா உட்பட நாடு முழுவதும் பரவலாக வெளுத்து வாங்கிய தென்மேற்கு பருவமழை நாளையுடன் நிறைவடைய உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.
[நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.. தாக்குதலில் மீனவர்கள் பலத்த காயம்!]
தென்மேற்கு பருவமழை நிறைவடையும் அதே நாளில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்றும் இந்திய வானிலை மையம் அறிவித்திருந்தது. பொதுவாக வடகிழக்கு பருவமழை தமிழகத்திற்கு அதிக மழை பொழிவை தரும் என்பதால் வடகிழக்கு பருவமழை மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

வளிமண்டல தாழ்வு நிலை
இந்நிலையில் அரபிக்கடல் முதல் இலங்கை வரை கேரளா மற்றும் தமிழகம் வழியாக வளி மண்டலத்தில் மேலடுக்கு தாழ்வு நிலை உருவாகி இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மிதமான மழை
தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

உள் தமிழகத்தில் கனமழை
வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் உள் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது.

இரவில் மழை பெய்யும்
மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் மையம் கூறியுள்ளது.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications