சென்னை விருகம்பாக்கம் ஐஓபி வங்கியில் ரூ.35 லட்சம் கொள்ளை: துப்பு கிடைத்துவிட்டதாக கமிஷனர் பேட்டி
விருகம்பாக்கம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.32 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: விருகம்பாக்கத்தில் உள்ள ஐஓபி வங்கியில் லாக்கரை உடைத்த மர்மநபர்கள் அங்கிருந்த ரூ.35 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
சென்னை விருகம்பாக்கத்தில் ஆற்காடு சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை உள்ளது. இங்கு இன்று ஊழியர்கள் வழக்கம்போல் பணிக்கு வந்தனர். அப்போது வங்கியின் சுவரில் துளையிடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் வங்கியில் இருந்த 2 லாக்கர்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 35 லட்சமாகும்.

சிசிடிவி காட்சிகள்
இந்த சம்பவம் தொடர்பாக விருகம்பாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

பதற்றம்
கொள்ளையடிக்கப்பட்ட வங்கி முன்பு வாடிக்கையாளர்கள் திரண்டுள்ளனர். கொள்ளையடிக்கப்பட்டவற்றில் தங்களுடைய பணம், நகை இருக்குமோ என்று வாடிக்கையாளர்கள் பதற்றத்துடன் காணப்படுகின்றனர்.

தகவல்கள் கசிந்தன
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக வங்கி அதிகாரிகளிடம் போலீஸார் விசாரணை நடைபெற்று வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. வங்கி கொள்ளையில் கடந்த 4 ஆண்டுகளாக ஹவுஸ் கீப்பிங் பணியில் இருந்தவர்தான் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.

கமிஷனர் ஆய்வு
கொள்ளையர்கள் கேஸ் சிலிண்டர் கட்டர் வைத்து வெல்டிங் செய்துவிட்டு முதல் தளத்திலிருந்து இருந்து லாக்கர் அறைகள் இருக்கும் இடத்திற்கு சென்றுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக வங்கியில் சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் ஆய்வு நடத்தினார்.

கணக்கெடுப்பு பணிகள்
தற்போது வரை 130 பைகளில் வைக்கப்பட்ட 106 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேலும் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து காவல் துறை விஸ்வநாதன் கூறுகையில், வங்கியில் ஒரு ஆள் நுழையும் அளவுக்கு துளையிட்டு கொள்ளை நடந்துள்ளது.

துப்பு கிடைத்துள்ளது
2 லாக்கர்கள் மட்டுமே உடைக்கப்பட்டுள்ளது. மற்றவை பாதுகாப்பாக உள்ளது என்பது முதல் கட்டமாக தெரிந்துள்ளது. குற்றவாளி பற்றி துப்பு கிடைத்துள்ளது. எனவே கொள்ளையர்களை விரைவில் கண்டுபிடித்துவிடுவோம் என்று விஸ்வநாதன் தெரிவித்தார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆயிரம் பாதுகாப்பு கொடுத்தாலும்.. 'இது' மட்டும் குறையவேயில்லை.. RBI வெளியிட்ட பகீர் ரிப்போர்ட்! -
மத்திய அரசின் புதிய சேவை.. உங்கள் பணம், உங்கள் கையில்.. இனி ஒரு ரூபாய் கூட மிஸ் ஆகாது! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications