Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காதலித்து ஏமாற்றிய வழக்கில் கைதான வருண்குமார் ஐபிஎஸ்க்கு “திடீர்” நெஞ்சுவலி – மருத்துவமனையில் அனுமதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: காதலித்தப் பெண்ணை ஏமாற்றி, வரதட்சணைக் கேட்டு துன்புறுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி வருண் குமாருக்கு "திடீர்" நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

IPS Varun kumar suffered by Sudden heart attack…

பயிற்சியில் மலர்ந்த காதல்:

சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி . இவர் சென்னை அண்ணா நகரில் உள்ள ஐபிஎஸ் பயிற்சி மையத்தில் படித்து வந்தபோது இவருக்கும், அதே மையத்தில் படித்த திருச்சியைச் சேர்ந்த வருண்குமார் என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

ஐபிஎஸ் அதிகாரி:

கடந்த 2011 ஆம் ஆண்டு இரு வீட்டாரும் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர்.இதற்கிடையே வருண்குமார் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார்.

வரதட்சணை கணக்கு:

இதன் பின்னர்தான் அவர்களுடைய சுயரூபத்தைக் காட்டத் துவங்கினர். பிரியதர்ஷினி குடும்பத்தினரிடம் வரதட்சணையாக லட்சக்கணக்கில் பணமும், 2 கிலோ தங்கமும், சொகுசு காரும் கேட்டதால் திருமணம் நின்று விட்டது.

பிரியதர்ஷினி புகார்:

இதுகுறித்து பிரியதர்ஷினி சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார். அதன்பேரில் வரதட்சணை ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் போலீஸ் அதிகாரியாக வருண்குமார் நியமிக்கப்பட்டார்.

முன் ஜாமீன் மனு:

தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக ஐகோர்ட்டில் அவர் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதேபோல் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவும் கடந்த பிப்ரவரி மாதம் தள்ளுபடி ஆனது.

சரணடைந்த வருண்:

இந்த நிலையில் ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் நேற்று காலை சைதாப்பேட்டை பெருநகர 11 ஆவது கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு சாந்தி முன் சரண் அடைந்தார். இதை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட்டு சாந்தி வருகிற 12 ஆம் தேதி வரை அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

மீண்டும் ஜாமீன் மனு:

பின்னர் வருண்குமார் தரப்பில் ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை 30 ஆம் தேதிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிடப்பட்டது.இதற்கிடையே தான் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என கோரி ஒரு மனு தாக்கல் செய்தார்.

மறுத்த பிரியா தரப்பு:

இந்த மனு மீதான விசாரணை மாஜிஸ்திரேட்டு சாந்தி முன் வந்தது. அப்போது அரசு தரப்பிலும், பிரியதர்ஷினி தரப்பிலும் எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனு தள்ளுபடி:

இதனையடுத்து இந்த மனுவை மாஜிஸ்திரேட்டு சாந்தி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். போலீஸ் ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் நீதிமன்றத்தில் சரண் அடைந்த தகவல் அறிந்ததும் இந்த வழக்கை விசாரிக்கும் கூடுதல் துணை கமிஷனர் வசுந்திரதேவி நீதிமன்றத்திற்கு வந்தார்.

அரசு தரப்பில் மனு:

அரசு தரப்பு வக்கீல் மானுவேல் அரசுவிடம் ஆலோசனை நடத்தினார். பின்னர் சைதாப்பேட்டை பெருநகர 11 ஆவது கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு சாந்தியிடம் அரசு தரப்பு வக்கீல் மானுவேல்அரசு ஒரு மனு தாக்கல் செய்தார்.

இன்று விசாரணை:

அதில் இந்த வழக்கில் வருண்குமாரிடம் விசாரணை நடத்த வேண்டி உள்ளது. எனவே 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட்டு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார்.

திடீர் நெஞ்சுவலி:

இதைத்தொடர்ந்து ஜெயிலில் அடைப்பதற்காக கோர்ட்டில் இருந்து வருண்குமாரை போலீசார் அழைத்து சென்றனர். சிறைக்கு சென்றதும் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியதால் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+