தீவிரவாதி அபுபக்கர் திருப்பூரில் பதுங்கல்?… பறவை பாஷா எங்கே? போலீஸ் தேடுதல் வேட்டை
திருப்பூர்: தேடப்பட்டு வரும் தீவிரவாதியான அபு பக்கர் திருப்பூரில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, காவல்துறையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.
நாகூரைச் சேர்ந்த அபு பக்கர் சித்திக் கடந்த 18 ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கிறார்.
1995 ஆம் ஆண்டு நாகூரில் இந்து முன்னணி பிரமுகர் தங்க முத்து கிருஷ்ணனை கொலை செய்ய புத்தக பார்சல் அனுப்பியது, மயிலாடுதுறையில் இந்து அமைப்பைச் சேர்ந்த ஜெகவீர பாண்டியன் என்பவரை கொலை செய்ய புத்தக பார்சல் அனுப்பியது மற்றும் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இந்து முன்னணி அலுவலகத்தில் குண்டு வீசிய வழக்குகளில் தொடர்புடையவர்.
மேலும் பாரதிய ஜனதா மாநிலச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ், இந்து முன்னணி பிரமுகர் வெள்ளையப்பன் ஆகியோர் கொலை வழக்கிலும் அபு பக்கர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
தமிழகத்தை கடந்த 3 மாதங்களாக கலக்கி வந்த பயங்கர தீவிரவாதிகள் போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர் தமிழக போலீசார். இவர்களுக்கு எல்லாம் தலைமை தாங்கி, தளபதியாக செயல்பட்ட சர்வதேச தீவிரவாதி அபுபக்கர் சித்திக் என்பது தெரியவந்துள்ளது. பிடிபட்ட தீவிரவாதிகளிடம் நடத்திய விசாரணையின்போது தமிழகத்தை சீர்குலைக்க அவருடன் இணைந்து தீட்டிய சதித்திட்டம் குறித்து பல்வேறு தகவல்களை வெளியிட்டு உள்ளனர்.
போலீஸ் பக்ருதின் மற்றும் அவரது கூட்டாளிகள் பிடிபட்ட நிலையில் அபு பக்கர் திருப்பூரில் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதேசமயம் மற்றொரு தேடப்படும் குற்றவாளியான பறவை பாஷாவை தேடும் பணியிலும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications