ஜல்லிக்கட்டு சங்கத்தினரிடம் ஓ.பி.எஸ். பேச்சு.. எந்தப் பலனும் இல்லை!
தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஜல்லிக்கட்டு நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் அது பலன் தரவில்லை.
சென்னை: முதல்வர் ஓ.பி. பன்னீர் செல்வம் அலங்காநல்லுரில் ஜல்லிக்கட்டை தொடங்கி வைப்பதற்காக மதுரை வந்த நிலையில் அதற்கான வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. கடைசி முயற்சியாக ஜல்லிக்கட்டு சங்க நிர்வாகிகளிடம் பேசசுவார்த்தை நடத்தினார் முதல்வர். ஆனால் அதற்குப் பலன் கிடைக்கவில்லை.
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் கடந்த ஆறுநாட்களாக வரலாறு காணாத புரட்சியாக நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த மக்கள் புரட்சியை அரசு சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதுபோல், முதல்வர் அவசர சட்டத்தைக் கொணர்ந்தார். ஆனால், மக்கள் 'நிரந்தர சட்டமே நிரந்தரத் தீர்வு' என்ற ஒற்றை கோரிக்கையுடன் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

மேலும், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை தொடங்கிவைக்க முதல்வர் அங்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அங்கு வந்த அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் தங்கள் தீவிர எதிர்ப்பை தெரிவித்தனர். அதையடுத்து, ஜல்லிக்கட்டு நடத்தும்ா முயற்சி கைவிடப்பட்டது. அடுத்து, திண்டுக்கல் நத்தம்கோவில்பட்டியில் ஜல்லிக்கிக்கட்டு நடத்தப்படும் என்று அதிமுகவினர் அறிவித்தனர். ஆனாலும் அங்கும் எதிர்ப்புகே கிளம்பியதால் செய்வதறியாது அரசு திணறி வருகிறது. இப்படியான ஒரு எதிர்ப்பை ஆளும் அரசு எதிர்பார்க்கவில்லை.
இந்நிலையில், முதல்வர் ஜல்லிக்கட்டு சங்க நிர்வாகிகளை அழைத்து பேசுவார்த்தை நடத்தினார். அச்சங்க நிர்வாகிகள் மூலம் , மக்களை சமாதானப்படுத்தும் முயற்சி நடந்தது. ஆனால் அது பலன் தரவில்லை.
இருப்பினும் அலங்காநல்லூர் மக்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் மற்றும் கோடாட்ட்சியர் செந்தில்குமாரி ஆகியோரை அலங்காநல்லூருக்கு முதல்வர் அனுப்பி வைத்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications