கொள்ளையடித்த பணத்தில் 0.0001% செலவு செய்தது ஒரு குற்றமா?: ராமதாஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜயபாஸ்கர் என்ன தவறு செய்தார்... அவரை ஏன் நீக்க வேண்டும்?: தினகரன் - அதானே... கொள்ளையடித்த பணத்தில் 0.0001% செலவு செய்தது குற்றமா? என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இடைத்தேர்தலையொட்டி ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா செய்தது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்தினார்கள். திங்கட்கிழமையும் விசாரணைக்கு வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது உள்பட சில விவகாரங்கள் குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

விஜயபாஸ்கர்

விஜயபாஸ்கர் என்ன தவறு செய்தார்... அவரை ஏன் நீக்க வேண்டும்?: தினகரன் - அதானே... கொள்ளையடித்த பணத்தில் 0.0001% செலவு செய்தது குற்றமா?

பாலியல் வன்கொடுமை

ஹைத்தி தீவில் இலங்கைப் படைகள் பாலியல் வன்கொடுமை: செய்தி - சிங்களப்படைகளின் முழுநேரப் பணியே இதுதானே. கடும் நடவடிக்கை தேவை!

தமிழச்சிகள்

ஹைத்தி பாலியல் கொடுமை. சிங்களப்படைகளுக்கு அமெரிக்கா கண்டனம்- நல்லது. இதேகொடுமை தமிழச்சிகளுக்கு நடந்தபோது தெரியவில்லையா?

பெங்களூர்

பெங்களூரில் ரூ.14 கோடி பழைய பணம் பதுக்கி வைத்திருந்த கவுன்சிலர் தமிழகத்திற்கு தப்பினார்: அதுசரி.கூட்டாளிகள் இடத்தில் தானே தஞ்சமடைய முடியும்?

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
PMK founder Dr. Ramadoss took to twitter to slam TTV Dinakaran and TN health minister Vijayabhaskar.
Please Wait while comments are loading...