கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. பள்ளிக்கு நள்ளிரவு சென்ற தாளாளர் மகன் என பரவிய காட்சி.. போலீஸ் மறுப்பு

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: 12 ஆம் வகுப்பு மாணவி மர்ம மரணம் அடைந்த கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியின் தாளாளர் மகன் நள்ளிரவு பள்ளிக்கு சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் அதன் உண்மை தன்மை குறித்து அலசுவோம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் கிராமத்தில் சக்தி இண்டெர்நேஷனல் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. இது ஈசிஆர் இண்டெர்நேஷனல் பள்ளி என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த தனியார் பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

மாணவி மர்ம மரணம்

மாணவி மர்ம மரணம்

பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த இந்த மாணவி கடந்த 13 ஆம் தேதி இரவு மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மாணவி மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும் உறவினர்களும் தெரிவித்து வந்தனர். இதற்கு நியாயம் கேட்டு மாணவியின் உறவினர்கள், பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தினர்.

கலவரம்

கலவரம்

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்ட பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். பெரும் போராட்டமாக இது உருவெடுத்த நிலையில் ஒரு கும்பல் பள்ளியின் 10க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கும், பள்ளி கட்டிடத்துக்கும் தீ வைத்தது. மேலும் சிலர் பள்ளியிலிருந்து மேசை, நாற்காலிகள், குளிர்சாதன பெட்டிகளை திருடிச் சென்றனர்.

பலர் கைது

பலர் கைது

போராட்டம் வன்முறையாக உருவெடுத்ததை தொடர்ந்து போலீசார் அவர்களை கட்டுப்படுத்த முயன்றனர். அவர்கள் மீது போராட்டக்கார்கள் கற்களை வீசி தாக்கியதில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் படுகாயமடைந்தனர். இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி தாலுகா, சின்ன சேலம், நயினாய் பாளையம் பகுதிகளுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த வன்முறை தொடர்பாக 300 க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.

சிபிசிஐடி விசாரணை

சிபிசிஐடி விசாரணை

இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது. இந்த வன்முறைக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று உயிரிழந்த மாணவியின் தாயார் தெரிவித்துள்ள நிலையில், ஒரு கும்பல் திட்டமிட்டு உள்ளே புகுந்து பள்ளியில் தாக்குதல் நடத்தியதாக பலர் குற்றம்சாட்டி வருகின்றனர். வாட்ஸ் அப் குழுமம் ஒன்றை தொடங்கி போராட்டத்துக்கு ஆட்களை திரட்டியதும் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மறு பிரேத பரிசோதனை

மறு பிரேத பரிசோதனை

இது தொடர்பாக 108 பேர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்த மாணவியின் தந்தை தொடர்ந்த வழக்கை ஏற்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் நேற்று மறு பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.

பரவும் வீடியோக்கள்

பரவும் வீடியோக்கள்

மாணவி மரணம் தொடர்பாகவும், வன்முறை தொடர்பாகவும் சமூக வலைதளங்களில் பல்வேறு வீடியோக்களும் புகைப்படங்களும் பகிரப்பட்டு வருகின்றன. இதில் உண்மையான தகவல்களை விட அதிகமாக பொய்யான, கற்பனையான, பழைய வீடியோக்களும், புகைப்படங்களும் வெளியாகி மக்களை குழப்பி வருவதுடன், தவறான விளைவுகளை உண்டாக்குகின்றனர்.

தாளாளர் மகன்

தாளாளர் மகன்

இதேபோல் ஒரு வீடியோ பேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பரவியது. அதில், ஜூலை 13 ஆம் தேதி இரவு 10:34 மணியளவில் ஒருவர் பள்ளிக்குள் செல்வதை போன்ற காட்சியை பகிர்ந்து பள்ளி, தாளாளர் மகன் நள்ளிரவில் ஏன் பள்ளிக்கு செல்கிறார் என்று கேள்வி எழுப்பி இருந்தனர். இதனை பலரும் பகிர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

போலீஸ் மறுப்பு

போலீஸ் மறுப்பு

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி காவல்துறை இதனை மறுத்துள்ளது. ட்விட்டரில் பகிரப்படும் வீடியோ, "கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் இறந்துபோனது சம்மந்தமாக நள்ளிரவில் பள்ளியில் மர்மநபர் ஒருவர் நடந்து செல்வது போன்ற வீடியோ காட்சி சமூகவளைதளத்தில் பரவிவருகிறது. இது சம்மந்தமாக விசாரணை செய்த போது இந்த வீடியோ சேலம் மாவட்டம், வாழப்பாடி காவல் நிலையம், சிங்கபுரம் அரசு பள்ளியில் உள்ள மடிகணினியை திருடமுயற்ச்சி செய்த சம்பவம் தொடர்பான CCTV வீடியோ என்று தெரியவருகிறது.

எச்சரிக்கை

எச்சரிக்கை

இந்த சம்பவத்தை வேறு விதமாக திசைதிருப்பி கனியாமூர் சக்தி பள்ளியில் நடந்த சம்பவத்தோடு தொடர்புபடுத்தி பொய் செய்தியை மக்கள் மத்தியில் கிளர்ச்சியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பரப்பிவருகின்றனர். இதுபோன்ற சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்." என்று குறிப்பிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+