ஒரு நாள் கூட கிடைக்காமல் போயிருச்சே!
Subscribe to Oneindia Tamil
Recommended Video

மெரினாவில் ஒரே ஒருநாள் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நாளை ஒரு நாள் போராட்டம் மெரீனா கடற்கரையில் நடத்திக் கொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு நிலையில் அதை இரவில் ஹைகோர்ட் பெஞ்ச் தடை செய்து விட்டது.
அகில உலகத்தையே தமிழகத்தின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த மண் மெரீனா கடற்கரை மண். பாலகங்காதர திலகர் கால் பதித்த, முழங்கிய மண் மெரீனா மண். சுதந்திரப் போரில் முக்கிய அங்கம் வகித்த மண் மெரீனா மண். இப்படிப்பட்ட மண்ணில் ஒரே ஒரு நாள் மட்டும் போராட்டம் நடத்திக் கொள்ள அனுமதி கிடைத்தது பலரையும் முனுமுனுக்க வைத்தது.
ஆனால் தற்போது அதற்கும் கூட வழியில்லாமல் செய்து விட்டது சென்னை உயர்நீதிமன்ற பெஞ்ச்.

தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் மட்டும்தானா பிரச்சினை..?
- ஜெயலலிதா மறைவு, கருணாநிதி ஓய்வுக்குப் பிறகு தமிழகத்தை திட்டமிட்டு சூறையாடி வருகின்றனர்.
- ஆள் ஆளுக்கு கட்சி ஆரம்பிக்கிறார்கள். தலைவர்கள் எல்லாம் ஆபாசமாக பேச ஆரம்பித்து விட்டனர். வன்முறைப் பேச்சுக்களுக்கு வரம்பே இல்லை. மக்கள் பயந்து போய் கிடக்கின்றனர்.
- டாஸ்மாக் துயரத்திலிருந்து தமிழகம் மீட்டெடுக்கப்பட வேண்டியுள்ளது. தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் தமிழகத்துப் பெண்கள்.
- தமிழகத்தில் எந்தவிதமான நியாயமான கோரிக்கைகளும் நியாயமான முறையில் நிறைவேறுவதில்லை. அடக்குமுறைகளுக்கு இங்கு பஞ்சமே இல்லை.
- கல்வி நிலையங்கள் ஊழல், பாலியல் முறைகேடுகளில் சிக்கித் தவிக்கின்றன. தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணக் கொள்ளை தலைவிரித்தாடுகிறது.
- தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரங்கள் வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளன. சிறுமிகள் சிதைக்கப்படுகிறார்கள். பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை.
- ஆணவக் கொலைகள் இன்னும் கூட நின்ற பாடில்லை. தொடர் கதையாக தொடர்ந்து கொண்டுள்ளன.
- தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் முழுமையாக அழிக்கப்பட்டு வருகிறது. நிம்மதியாக மீன் பிடித்து விட்டு திரும்ப முடியவில்லை.
- காவிரி டெல்டா பாலைவனமாகி வருகிறது. மீத்தேன், ஹைட்ரோகார்பன் என்று பற்பல பெயர்களில் நாலாபுறமும் சுற்றி வளைத்து வேட்டையாடி வருகின்றனர். விடிவே இல்லை.
- தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.
- நெல்லையில் தாமிரபரணியை சுருக்கி சீரழித்து வருகின்றனர்.
- விவசாயிகளின் பிரச்சினைகள் கணக்கே இல்லாமல் நீண்டு கொண்டிருக்கின்றன. வங்கிகளின் கடன் வசூல் அடாவடியாக போய்க் கொண்டுள்ளது. ரவுடிகளை வைத்து கடன் வசூலிப்பதால் எத்தனை எத்தனை தற்கொலைகள்.
- தாது மணல் கொள்ளைக்கு வரம்பே இல்லை. இயற்கை வளச் செல்வங்கள் கொள்ளை போவதை தடுக்கவும் உறுதியான நடவடிக்கை இதுவரை இல்லை.
- மக்கள் தங்களது கோரிக்கைக்காக நடுத் தெருவுக்கு வருவது அதிகரித்து வருகிறது. தினசரி ஒரு போராட்டம், உண்ணாவிரதம், தடியடி என்று தமிழகமே தகித்துக் கொண்டிருக்கிறது.
- நீட் பிரச்சினை ஓயவில்லை. அரசு ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள் என அனைத்துத் தரப்பிலும் ஏகப்பட்ட அதிருப்திகள்.
- உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடக்கும் என்றே தெரியவில்லை. மேயர் இல்லை, நகராட்சிகளுக்குத் தலைவர் இல்லை, கவுன்சிலர் இல்லை. கிராமப்புறங்கள் ஸ்தம்பித்துப் போயுள்ளன.
- அடி மட்டத்திலிருந்து கோட்டை வரை ஊழல் கொடி கட்டிப் பறக்கிறது. இடமாற்றம், நியமனம் என எல்லாவற்றுக்கும் கமிஷன். லட்சக்கணக்கில் பணம் இடம்மாறும் அவலம்.
இன்னும் இன்னும் எத்தனை எத்தனை பிரச்சினைகள்.. இத்தனையையும் தீர்க்க.. ஒரு நாள் போதுமா?
More From
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications