விஷாலுக்கே இந்த அக்கப் போர்னா... கமல், ரஜினியெல்லாம் வந்தா என்னாகுமோ, ஏதாகுமோ?

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    விஷாலுக்கே இந்த அக்கப் போர்னா... கமல், ரஜினியெல்லாம் வந்தா என்னாகுமோ ?- வீடியோ

    சென்னை : நடிகர் விஷால் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கியதற்கே இத்தனை அக்கப்போர் நடந்துள்ளதே, அதிகாரப்பூர்வமாக கட்சி தொடங்கி அரசியல் களம் காண இருக்கும் நடிகர் கமல் தேர்தலில் போட்டியிடும் சூழல் வந்தால் என்னென்ன கூத்துகள் அரங்கேறும் என்பதே தற்போதைய ஹாட் டாபிக்காக உள்ளது.

    ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம், மக்களுக்கு நல்லது செய்வதற்காக ஆர்கே நகரில் போட்டியிடுகிறேன் என்று உரத்த குரலோடு களமிறங்கினார் நடிகர் விஷால். ஆனால் 3 நாள் தேர்தல் பரபரப்பு அவரை தலை கிறுகிறுக்க வைத்துள்ளது. என்ன நடக்குதுன்னே புரியலங்க என்று விஷாலை புலம்ப வைத்து விட்டார்கள் பழம் தின்று கொட்டை போட்ட அரசியல்வாதிகள்.

    எனக்கு நேர்ந்த அநியாயத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும். வேட்பு மனுவை முன்மொழிந்தவரில் முதல் ஆளான சுமதி என்ற பெண்ணை வைத்தே விஷாலின் கண்ணை குத்த வைத்துள்ளனர். இதே போன்று தீபன் என்பவரும் பின்வாங்கியதால் தான் விஷாலின் வேட்பு மனுவிற்கு சிக்கல் வந்தது. மிரட்டப்பட்டதாக ஆடியோ ஆதாரம் உள்ளதாக சொன்ன விஷால், தேர்தல் அதிகாரி வேட்பு மனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கும் வீடியோவும் உள்ளதாக புலம்பி வருகிறார்.

    மோதவிட்டு பார்த்திருக்கலாமே?

    மோதவிட்டு பார்த்திருக்கலாமே?

    நடிகர் விஷால் சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்து களமிறங்கியதற்கே அவருக்கு இத்தனை எதிர்ப்புகளா. வளர்ந்த அரசியல் கட்சியாக இருந்தால் சுயேச்சை வேட்பாளரைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும் என்று பல்வேறு கேள்விகள் இதில் எழுகின்றன. எதிரி யாராக இருந்தாலும் அவர்களை களத்தில் இறங்கவிட்டு மோதுவதே சிறந்ததாக இருக்கும், ஆனால் அதிகாரத்தை பயன்படுத்தி களத்தில் இருந்தே அப்புறப்படுத்துவது என்பதை ஏற்க முடியாது என்று கொந்தளிக்கின்றனர் விஷால் தரப்பினர்.

    பின்பலத்தை தாக்கும் நோக்கம்

    பின்பலத்தை தாக்கும் நோக்கம்

    நடிகர் விஷாலுக்கு இத்தனை எதிர்ப்புகள் வருவதற்கு காரணமாக சொல்லப்படுவது அவரை பின்னால் இருந்து இயக்குவதாக சொல்லப்படும் சக்திகளை தாக்கும் நோக்கம் என்றும் சொல்லப்படுகிறது. விஷாலை கமல் பின்னால் இருந்து இயக்குகிறார் என்று முதலில் சொல்லப்பட்டாலும், விஷாலை இயக்குவது டிடிவி தினகரன் என்ற கருத்தும் நிலவுகிறது.

    அதிகார வர்க்கம் விடும் எச்சரிக்கையா?

    அதிகார வர்க்கம் விடும் எச்சரிக்கையா?

    எனவே தான் தினகரனுக்கு கொடுக்கும் அடியாக விஷாலுக்கு இந்த பாடம் கற்றுத் தரப்பட்டிருப்பதாக பார்க்கப்படுகிறது. ஒரு புறம் அரசியலுக்கு வர நினைக்கும் நடிகர்களுக்கான எச்சரிக்கை இது என்று கூட வைத்துக் கொள்ளலாம்.

    ரஜினி, கமல் வந்தால்

    ரஜினி, கமல் வந்தால்

    ஆனால் இப்போது எழும் கேள்வி என்னவென்றால் விஷாலுக்கே இப்படி பயந்தால், விரைவில் அரசியல் கட்சி தொடங்கவுள்ள நடிகர் கமல்ஹாசன் தேர்தல் களம் கண்டால் அப்போது என்ன கூத்துகள் அரங்கேறும். இதே போன்று மாஸ் ரசிகர்களைக் கொண்டுள்ள ரஜினி அரசியலுக்கு வந்தால் அவரின் பாடு என்ன என்று பல கேள்விகள் எழுகின்றன.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+