சென்னை ஐடி அலுவலகத்தில் நாளை ஆஜராக அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார் ஆகியோருக்கு சம்மன்
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித் துறை அலுவலகத்தில் நாளை நேரில் ஆஜராகுமாறு தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், எம்ஜிஆர் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி ஆகியோருக்
சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித் துறை அலுவலகத்தில் நாளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், எம்ஜிஆர் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகரில் இடைதேர்தலில் வெற்றி பெற வாக்காளர்களை விலைக்கு வாங்க கோடிக்கணக்கிலான பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் நேற்று முந்தைய தினம் தமிழகம் முழுவதும் 35 இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், எம்ஜிஆர் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதா லட்சுமி ஆகியோரின் வீடுகளிலும், அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது. அப்போது முக்கிய ஆவணங்கள் கைபபற்றப்பட்டதாகவும் தெரிகிறது.
இதுதொடர்பான அறிக்கையை தேர்தல் ஆணையத்துக்கு வருமான வரித் துறையினர் தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் மேற்கண்ட மூவரும் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அச்சமயம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பப்படலாம் என்று அதுகுறித்து விளக்கம் கேட்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வரி ஏய்ப்பு, தேர்தல் விதிமுறை மீறல் ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications