விடாது விரட்டும் வருமான வரித்துறை.. அமைச்சர் விஜயபாஸ்கர் உறவினர்கள் தங்கியுள்ள விடுதியில் ரெய்டு!
அமைச்சர் விஜயபாஸ்கரின் உறவினர்கள் தங்கியுள்ள விடுதி அறைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை: அமைச்சர் விஜயபாஸ்கர் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரான நிலையில், அவரது உறவினர்கள் தங்கியுள்ள விடுதி அறைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தேர்தலையொட்டி தாராளமாக பணப்பட்டுவாடா நடைபெறுவதாக தேர்தல் ஆணைத்திற்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா தொடர்பாக வருமான வரித்துறையினர் அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், எம்ஜிஆர் பல்கலை துணை வேந்தர் கீதா லட்சுமி உள்ளிட்டோரின் வீடுகள் உட்பட 50 இடங்களில் சோதனை நடத்தினர். இதில் ஆர்கே.நகரில் ரூ. 89 கோடி வரை பணவரிவர்த்தனை செய்ததற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் புதுக்கோட்டையில் உள்ள இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் பெற்றோர் வசித்த வீட்டில் நடைபெற்ற வருமானவரிச் சோதனையில் 2 பெட்டிகள் நிறைய சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பாக விஜயபாஸ்கரின் தந்தை திருச்சியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
அதோபோல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று காலை நேரில் ஆஜராகினார். 5 மணி நேரமாக நடந்த விசாரணையில் விஜயபாஸ்கர் சரியாக பதிலளிக்காததால் மீண்டும் விசாரிக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் சென்னை பூக்கடையில் விஜயபாஸ்கர் உறவினர்கள் தங்கியுள்ள விடுதியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தஞ்சை முருகப்பா செட்டித்தெருவில் உள்ள தனியார் விடுதியிலும் சோதனை நடந்து வருகிறது.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications