பெண் வருமான வரித்துறை அதிகாரிக்கு மிரட்டல்.. அமைச்சர்கள் காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன் மீது புகார்
வருமான வரித்துறை பெண் அதிகாரியை மிரட்டியதாக அமைச்சர்கள் காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன் மீது வருமான வரித்துறையினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
சென்னை: அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனையின் போது பெண் அதிகாரி மிரட்டப்பட்ட புகாரின் பேரில் அமைச்சர்கள் காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது வருமான வரித்துறையினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க அம்மா அணி சார்பில் பணப்பட்டுவாடா நடப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், கடந்த 7ம் தேதி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. இந்த ரெய்டின்போது ரூ.89 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதற்கான ஆதாரம் உள்பட பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றியது வருமான வரித்துறை.

இதுதெடார்பான விசாரணைக்கு ஆஜரான விஜயபாஸ்கர், மூன்று நாட்கள் அவகாசம் கேட்டுள்ளார். இந்நிலையில் வருமான வரித்துறை புலனாய்வுத் துறை இயக்குநர் தமிழக காவல்துறை ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில்
விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடந்த போது, அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், காமராஜ் மற்றும் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் பெண் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்ததாகவும், அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்தல், ஆதாரங்களை அழித்தல், மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யுமாறு கூறப்பட்டுள்ளது.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா?











Click it and Unblock the Notifications