யாகம், ஹோமம், ரத்ததானம்: அம்மாவின் பர்த்டேவை ஜமாய்க்கும் அதிமுகவினர்
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று தனது 67வது பிறந்தநாளை கொண்டாடினார். ஜெயலலிதாவின் பிறந்தநாளை அதிமுகவினர் தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடியுள்ளனர்.
அதன் விவரம் வருமாறு,

கோவில்கள்
தமிழகத்தில் நெல்லை உள்பட பல்வேறு இடங்களில் உள்ள கோவில்களில் ஜெயலலிதாவின் பெயரில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. மேலும் யாகம், ஹோமம் ஆகியவையும் நடத்தப்பட்டன.

நயினார் நாகேந்திரன்
நெல்லையில் நடந்த பிறந்தநாள் விழாவில் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் தலைமையில் அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

தேவாலயங்கள்
தமிழகத்தில் உள்ள பனிமயமாதா ஆலயம் உள்பட பல்வேறு தேவாலயங்களில் அதிமுகவினர், பொது மக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர்.

முதியோர் இல்லம்
ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கு உணவு, இனிப்பு வழங்கப்பட்டது.

ரத்ததான முகாம்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர், கல்லூரி மாணவ, மாணவியர், பொது மக்கள் கலந்து கொண்ட ரத்ததான முகாம்கள் நடைபெற்றது.

திருமணம்
அம்மாவின் பிறந்தநாளையொட்டி நூற்றுக்கணக்கான ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு தாய் வீட்டு சீரும் ஆளுங்கட்சியினர் சார்பில் அளிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications