சரத்குமார் அணிக்கு... இல்லை, சரத்குமாருக்கு இது கவுரவமான தோல்விதான்!
-எஸ் ஷங்கர்
நடிகர் சங்கத் தேர்தல் ஒருவழியாக முடிந்துவிட்டது. சரத்குமார் - ராதாரவி அணிக்கு இது கவுரமான தோல்விதான். விஷால் அணியை கேள்வி கேட்கும் அவ்வளவு அதிகாரத்தை இந்த அணிக்குத் தந்திருக்கிறது அவர்களுக்குக் கிடைத்திருக்கிற கணிசமான வாக்குகள்.
பொறுப்பில்லாமல் வாய்க்கு வந்தபடி பேசும் சிம்பு தோற்றதைத் தவிர, கொண்டாட வேறேதுமில்லை. நிச்சயம் நடிகர் சங்கத்தில் சரத்குமாரின் ஆளுமை தொடரும் என்றே நம்புகிறேன்!

விஷாலின் வெற்றிக்கு முக்கிய காரணம் ராதாரவியும் சரத்குமாரும்தான். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இன்றைக்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் பிறமொழிக்காரர்கள்தான், விஷால் உள்பட! அவர்களிடம் போய் விஷால் ரெட்டி, என இன ரீதியாகப் பிரச்சாரம் செய்தால் எப்படி எடுபடும்? நடிகர் சங்கப் பிரச்சினைகள் என்ன? அவற்றைச் சரி செய்யும் தகுதி யாருக்கு உள்ளது? என்கிற ரீதியில்தான் சரத்குமார் அணியின் பிரச்சாரம் இருந்திருக்க வேண்டும்.
அதேபோல, சம்பந்தமே இல்லாத, இந்தத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமைகூட இல்லாத பாரதிராஜா, கலைப்புலி தாணு, சேரன், செல்வமணி, சீமான் போன்றவர்கள் ஆதரவு தெரிவிக்கிறோம் என்கிற பெயரில் 'தமிழ், தமிழன்..' என்று அறிக்கை தந்தது சரத்குமாருக்கு இன்னொரு பெரிய மைனஸ்.

ஆனால் இத்தனை மைனஸ் இருந்தாலும் அவர் நாசருக்கு சரிக்கு சமமாகவே வாக்குகள் பெற்றுள்ளார். வித்தியாசம் வெறும் 107 வாக்குகள்தான். நாடக நடிகர்களில் 600 பேர் வாக்கு இவருக்குக் கிடைத்திருக்கிறது. ஆனால் சென்னையில் உள்ள நடிகர்கள் 625 பேரின் வாக்குகள் அவருக்குக் கிடைத்திருக்கின்றன.
அதேபோல ராதாரவி. அவரும் லேசில் தோற்கவில்லை. விஷாலுக்கு கடும் நெருக்கடி தரும் வகையில் 1138 வாக்குகளை அவர் பெற்றிருக்கிறார்.
விஷால் அணியின் வெற்றி, விஷாலின் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. அதில் கணிசமான உண்மையும் உள்ளது. சரியான திட்டமிடல், எதிரணியின் பலவீனம் தெரிந்து செக் வைத்தது, கடுமையான உழைப்பு, குறிப்பாக நடிகைகள் மொத்தப் பேரின் வாக்குகளையும் தன் பக்கம் ஈர்த்தது... என இந்த வெற்றியில் விஷாலின் பங்களிப்பு அபாரம்.

நடிகர் சங்கம் என்றல்ல.. திரையுலகில் பெரும்பாலான நடுநிலையாளர்கள் விருப்பம், சரத்குமார் தலைவராக வேண்டும், மற்ற பொறுப்புகளுக்கு விஷால் அணி வரவேண்டும் என்பதாகத்தான் இருந்தது. காரணம் சரத்குமாரின் செயல்திறன், புத்திசாலித்தனம், அனைவருடன் இணங்கிச் சென்று பிரச்சினையை முடித்துவைக்கும் பாங்கு. ஆனால் சிம்பு, ராதிகா, ராதாரவி போன்றவர்கள் அந்த வாய்ப்பை எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு சிதைத்தார்கள், விரும்பத்தகாத பேச்சுக்களால்!
ஒரு உதாரணம்: நேற்று வாக்குப் பதிவின் போது நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் வந்தார். அவரை வரவேற்ற ராதாரவி, 'வாம்மா... சொல்வதெல்லாம் உண்மை-ன்னு நிகழ்ச்சி நடத்தறீங்க. ஆனா சொல்றதெல்லாம் பொய்' என்று பகிரங்கமாகக் கூற, 'என்னண்ணே இப்படி பப்ளிக்ல...' என்று சங்கடத்துடன் வாக்களிக்கப் போனார். ராதாரவி கூறியதில் உண்மையிருந்தாலும், சொன்ன இடம் தவறல்லவா!!

மேடையில் திட்டிவிட்டு, உரிமையில் பேசினேன் என்று சொல்வதை சகித்துக் கொண்டது அந்தக் காலம். சங்கத்துக்கு தேர்தல் நடக்காத இந்த 18 ஆண்டுகளில் வந்த கலைஞர்களின் மனோபாவம் மாறிவிட்டது என்பதை ராதாரவி புரிந்து கொள்ள வேண்டும்.
சரத்குமார் அணியினர் தோற்றிருந்தாலும், அவர்கள் பெற்றுள்ள வாக்குகள், சங்கத்தில் அவர்களின் இருப்பை பலமாக பறைசாற்றுகின்றன. எந்த நடவடிக்கையாக இருந்தாலும் விஷால் அணி தன்னிச்சையாகச் செய்துவிட முடியாது என்பதை உணர்த்துவதாக உள்ளன.
நடிகர் சங்க ஒற்றுமை விஷயத்தில் நடுநிலைக் கலைஞர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அணி பிரிந்து நின்று மோதிக் கொண்டவர்களுக்குத்தான் ஆரம்பத்தில் சங்கடமாக இருக்கும். உள்குத்து வேலைகள் தொடர்ந்தாலும், வெளியில் 'வாங்கண்ணே' என சகஜமாகிவிடுவார்கள்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications