For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது எதிர்காலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.. சீமான் எச்சரிக்கை

நாடாளுமன்றத்துக்கும் சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது எதிர்காலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என சீமான் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: நாடாளுமன்றத்துக்கும் சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது எதிர்காலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என சீமான் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலோடு சட்டசபை தேர்தலையும் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலோடு, சட்டசபை தேர்தலையும் நடத்துவதற்கு தான் ஆதரவு தருவதாக அதிமுக எம்பியும் லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை பிரதமர் மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.

It is unnecessary for the Parliament and the Legislative Assembly at the same time: Seeman

2019ம் ஆண்டு பிப்ரவரி மாத இறுதி அல்லது மார்ச் மாத தொடக்கம் தேர்தலை நடத்த சரியான நேரம் எனவும், அந்த நேரத்தில் பள்ளிகளுக்கு தேர்வு, கோடை வெப்பம் மற்றும் மழை என எதுவும் இருக்காது என அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு, நாடாளுமன்ற தேர்தலோடு, 20 மாநிலத் தேர்தலை நடத்துவதன் மூலம், தேர்தலுக்கான செலவும் அரசுக்கு குறையும். அந்த பணத்தை மக்கள் நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்த முடியும் என தம்பிதுரை தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நாடாளுமன்றத்துக்கும் சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது எதிர்காலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றார். மேலும் நாடாளுமன்றத்துக்கும் சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தேவையற்றது என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.

English summary
Seeman opposing election at same time. He said elections to Parliament and Assembly simultaneously would have a huge impact in the future. Seeman further said that it is unnecessary for the Parliament and the Legislative Assembly at the same time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X