ரூ.170 கோடி பணம், 100 கிலோ தங்கம் பறிமுதல்.. நிறைவுக்கு வந்தது அருப்புக்கோட்டை வருமான வரி சோதனை!
சென்னையில் அரசு கான்டிராக்டர் வீடு, அலுவலகத்தில் 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர்.
Recommended Video

சென்னை: அரசு கான்டிராக்டர் வீடு, அலுவலகத்தில் 2 நாளாக நடந்த வருமான வரித்துறை சோதனை முடிவிற்கு வந்துள்ளது.
அருப்புக்கோட்டையில் சாலை ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டனர். ஒப்பந்ததாரர் செய்யாதுரையின் சென்னை அலுவலகத்திலும் 2 வது நாளாக இன்று சோதனை நடந்தது .
ஆபரேஷன் பார்க்கிங் என்ற பெயரில் இந்த ரெய்டு நடைபெற்று வருகிறது. இதில் சென்னையில் பல இடங்களில் பார்க் செய்யப்பட்டுள்ள கார்களில் பணம் பதுக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்றும் ரெய்டு
இந்நிலையில் இவரது வீடு, அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வந்தனர். அருப்புக்கோட்டையில் உள்ள எஸ்பிகே கன்ஸ்ட்ரக்ஷன் அலுவலகத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கான்டிராக்டர் செய்யாதுரை
சாலை ஒப்பந்ததாரர் செய்யாதுரை வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரில் அவருக்கு சொந்தமான இடங்களில் இந்த அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. செய்யாதுரைக்கு சொந்தமான எஸ்.பி.கே. கன்ஸ்ட்ரக்ஷன் குறுகிய காலத்தில் பெரும் வளர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.

சிறிய நிறுவனங்கள் பாதிப்பு
தமிழக நெடுஞ்சாலைதுறை ஒப்பந்த பணியை தன் கட்டுப்பாட்டில் இந்த நிறுவனம் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தால் சிறிய ஒப்பந்ததாரர்கள் நெடுஞ்சாலை பணியை பெறமுடியவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதிரடி சோதனை
சென்னையில் உள்ள எஸ்.பி.கே. கன்ஸ்ட்ரக்ஷன் அலுவலகத்திலும் சோதனை நடைபெறுகிறது. மயிலாப்பூர் பெசன்ட் நகர் ஆகிய இடங்களில் உள்ள அலுவலகங்களில் இந்த அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.

பணம் தங்கம் பறிமுதல்
சென்னை உட்பட 30 இடங்களில் நேற்று நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத 160 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. 100 கிலோ தங்கம் மூட்டை மூடடையாக பறிமுதல் செய்யப்பட்டது. பெரம்பூரில் 81 கிலோவும் தாம்பரத்தில் 19 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

முக்கிய ஆவணங்கள்
அருப்புக்கோட்டையில் நடைபெறும் சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக தொடரும் சோதனையில் மேலும் பல ஆவணங்களும் கணக்கில் வராத பணம், சொத்துக்குறித்த ஆவணங்கள் மற்றும் தங்கம் சிக்கலாம் என கூறப்படுகிறது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications